என் பல நாள் கனவு நிறைவேறியது.. டிடிஎப் வாசனின் காதலி ஷாலின் ஜோயா சொன்ன குட் நியூஸ்!
சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வரும் டிடிஎப் வாசனின் தோழியான ஷாலின் ஜோயா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் பிறந்த நடிகை ஷாலின் ஜோயா, குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படமான ஷோபிஸில் படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, 'ஆட்டோகிராப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். அவரது பிரபலமான படங்களில் ' எல்சம்மா என்ன ஆங்குட்டி ', 'மல்லு சிங்', 'கர்மயோதா', 'ரெபேக்கா ஊதுப் கிழக்கேமாலா','விசுதன்' 'தமகா' ஆகிய படத்தில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்த ஷாலின் ஜோயா, கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராஜா மந்திரி" படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து "கண்ணகி" என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷாலின் ஜோயா: திரைப்படத்தில் நடித்த ஷாலின் ஜோயா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஷாலின் ஜோயாவிற்கு பேசவும் தெரியல, சமைக்கவும் தெரியல என்ற பேச்சு எழுந்த போதும், விடாமல் முயற்சி செய்து அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை வந்தார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஜோயா கலந்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.

கனவு நினைவானது: இந்நிலையில், ஷாலின் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஷாலின் புதுவீடு வாங்கி அதில் குடியேறி உள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ள ஷாலின், 20 வயதின் போது எப்போ நாம் பெரியவளாகி சம்பாதித்து புது வீடு வாங்குவோம், அதுவும் பால்கனி உடன் கூடிய ஒரு சின்ன பிளாட் வாங்க வேண்டும் என்பது என் பல நாள் கனவாக இருந்தது. திருமணத்தை பற்றி நான் யோசித்ததே இல்லை. சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் என் ஆசை, ஏன் என்றால் அதுதான் ஒரு ரிட்டயர்மெண்ட் பிளான் மாதிரி, அந்த கனவு இன்று நிஜமாகி உள்ளது. இந்த பயணத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிடிஎப் வாசனின் காதலி: பைக் ரைடர் டிடிஎப் வாசனும் ஷாலின் ஜோயாவும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கேரளாவில் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. டிடிஎப் வாசனின் சிபாரிசின் மூலமாகத்தான் ஜோயா குக் வித் கோமாளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











