5 தங்கப்பதக்கங்கள்.. மாதவனின் மகன் வேதாந்த் வென்றிருப்பது மகிழ்ச்சி.. டிடிவி தினகரன் பாராட்டு!

சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவுக்காக 5 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார்.

ராக்கெட்ரி படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் டாப் ஹீரோவாக இந்தியா முழுவதும் மாதவனுக்கு செல்வாக்கு இருந்தாலும், அவரது மகன் வேதாந்த் மாதவனை நடிகராக அவர் மாற்றவில்லை.

அதற்கு பதிலாக மகனுக்கு அதிக ஆர்வம் இருக்கும் நீச்சல் துறையில் அவரது திறமைகளை வெளிக்காட்ட முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். அப்பாவின் பெயரை கெடுக்காமல் அடுத்தடுத்து தங்கப்பதக்கங்களை பெற்று தந்தையின் உச்சியை குளிர வைத்து வருகிறார் வேதாந்த்.

TTV Dhinakaran praises Actor Madhavans son Vedaant Madhavan for winning Gold Medals

மாதவனை யாருக்குத்தான் பிடிக்காது: காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு கூலர்ஸ் உடன் பைக் ஓட்டிக் கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "என்றென்றும் புன்னகை" என மாதவன் வந்த ஃபர்ஸ்ட் ஃபிரேமில் இருந்து இப்போது வரைக்கும் அவரது நடிப்பு என்றாலே அனைவரையும் கவரும் விதத்தில் தான் உள்ளது.

இந்தி சீரியல்களில் நடித்து சினிமாவில் நடிகராக மாறிய மாதவன் பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். ராக்கெட்ரி படத்தில் மாதவனுக்காக இந்தியில் ஷாருக்கானும் தமிழில் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்து இருந்தனர். அந்த அளவுக்கு சினிமாவில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்டவர் மாதவன்.

TTV Dhinakaran praises Actor Madhavans son Vedaant Madhavan for winning Gold Medals

சோறு போட்ட சுதா கொங்கரா: மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சுதா கொங்கரா மாதவன் உடன் 20 ஆண்டுகள் நட்பாக பழகி வருகிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவரை அழைத்து வயிறார வகை வகையாக சைவ விருந்து கொடுத்து அசத்தினார். இறுதிச்சுற்று 2 படத்தை சீக்கிரம் எடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு அந்த போட்டோக்கள் டிரெண்டாகின.

மாஸ் காட்டும் மாதவன் மகன்: வாரிசு நடிகர் என்று பெயர் வாங்காமல் தனது தந்தைக்கு மிகப்பெரிய பெயரை நீச்சல் துறையில் பதக்கங்களாக அள்ளி நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாஸ் காட்டி வருகிறார்.

சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் சமீபத்தில், மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியிலும் 5 தங்கப்பதக்கங்களை வென்று தந்தையை பெருமைப்பட வைத்துள்ளார்.

TTV Dhinakaran praises Actor Madhavans son Vedaant Madhavan for winning Gold Medals

டிடிவி தினகரன் பாராட்டு: "மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரு. மாதவன் அவர்களின் மகன் வேதாந்த்துக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்." என அமமுக தலைவர் டிடிவி தினகரன் பாராட்டி இருப்பது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் மாதவன் மகனை மனதார பாராட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X