தலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினகரன்
சென்னை: அமீரின் அச்சமில்லை அச்சமில்லை பட டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
முத்து கோபால் இயக்கத்தில் இயக்குநர் அமீர், சாந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சமில்லை அச்சமில்லை. படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் 3வது டீஸரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட டிடிவி தினகரன் அது குறித்து ட்வீட் செய்துள்ளார். தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்தாலும் அவர் டீஸரை வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
அச்சமில்லாதவனிடம் இருந்து அச்சமில்லை அச்சமில்லை பட டீஸர் வெளியீடு 👍வாழ்த்துக்கள் என்று டிடிவி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமீர்
டிடிவி தினகரன் அருகில் இருக்கும் அமீர் ரொம்பவே பவ்யமாக போஸ் கொடுத்திருப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாழ்த்து
வாழ்த்து
Comments


Click it and Unblock the Notifications