நானியின் "டக் ஜெகதீஷ்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவுட்.. ஃபுல் மீல்ஸ் ரெடி!

ஹைதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி நடித்து வரும் காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமான "டக் ஜெகதீஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஷ்யாம் சிங்கா ராய் படப்பிடிப்பின் பூஜை நடத்தப்பட்ட நிலையில் இப்பொழுது "டக் ஜெகதீஷ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மிகவும் வித்தியாசமாக வெளியாகியுள்ள "டக் ஜெகதீஷ்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

நடிகர் நானியின் திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமிம் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான நான் ஈ திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்திருக்க தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்று நானிக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியது.

இயக்குனர் சிவா நிர்வணா

இயக்குனர் சிவா நிர்வணா

2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான "நின்னுக்கோரி" திரைப்படத்தில் இயக்குனர் சிவா நிர்வணா உடன் இணைந்து ஏற்கனவே பணியாற்றியுள்ள நானி மீண்டும் "டக் ஜெகதீஷ்" திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் மாஸ் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கும் "டக் ஜெகதீஷ்" திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நிலையில் இப்பொழுது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

கண்ணில் வெறியுடன்

கண்ணில் வெறியுடன்

வாழையிலை நிறைய ஃபுல் மீல்ஸ் கறிவிருந்துடன், ஃபுல் ஃபர்மல்ஸில் டக் இன் செய்த காஸ்டியுமில் நானி உட்கார்ந்து கொண்டு பின்னால் இருந்து அருவாளை எடுக்கின்றவாறு கண்ணில் வெறியுடன் வெளியாகியுள்ள "டக் ஜெகதீஷ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கு தமன் மியூசிக் அமைத்துள்ளார். சகு கரபதி, ஹரிஷ் பெட்டி ஆகியோர் தயாரித்திருக்க வரும் 2021 ஏப்ரல் மாதம் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Read more about: tuck jagadishfirst look out
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X