“காபி கொட்ட கண்ணுக்காரி“ இணையத்தை கலக்கும்… துக்ளக் தர்பார் பாடல் !

சென்னை : துக்ளக் தர்பார் திரைப்படத்தின் துள்ளலான ரொமான்டிக் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

செப்டம்பர் 10ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது சன் டிவியில் நேரடியாக இத்திரைப்படம் வெளியாகி உள்ளது.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் துக்ளக் தர்பார். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.

இரண்டு இயக்குனர்கள்

இரண்டு இயக்குனர்கள்

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குனர்கள் பணியாற்றிள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குனராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்கள். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசைஅமைத்துள்ளார்.

ரொமான்டிக் பாடல்

ரொமான்டிக் பாடல்

சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் துள்ளலான ரொமான்டிக் பாடலான காமி காமி பாடல் வீடியோ வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

சன் டிவியில்

சன் டிவியில்

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திரையரங்குகள் தற்போது திறக்காத காரணத்தால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இதனால் வரும் விநாயகர் சதுர்த்தியில் இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அதன் பின்னர் சன் நெக்ஸ்ட் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம்

விக்ரம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது. மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதியாகவில்லை.

வைரல் வீடியோ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா , விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நயன்தாரா சமந்தாவுடன் பஸ்சில் விஜய் சேதுபதி பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பார்ப்பதற்கு கமல் ஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம் பெற்ற வலையோசை பாட்டில் வரும் காட்சி போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X