வெறித்தனமால இருக்கு.. வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்!
சென்னை: துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசி விவசாயி, மாஸ்டர், மாமனிதன், லாபம், கா பெ ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார்
இதில் மாஸ்டர், கா பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதேபோல் தெலுங்கில் உப்பென்னா, இந்தியில் லால் சிங் ச்சத்தா ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 5 அணிக்கு ரிலீஸ் ஆகும் என நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை டிவிட்டியிருந்தார்.
விஜய் சேதுபதி குரலில்
இதனை தொடர்ந்து சொன்னப்படி இன்று மாலை துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியானது. அண்ணாத்த சேதி என குறிப்பிடப்படும் இப்பாடலில் முதலில் அரசியல் சார்ந்த சில வசனங்களை பேசுகிறார் விஜய் சேதுபதி. பின்னர் ஃபாஸ்ட் பீட்டில் பட்டைய கிளப்புகிறது பாடல்.

முக்கிய கதாப்பாத்திரம்
கார்த்திக் நேத்தா இப்பாடலை எழுதியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியல் அனல்
துக்ளக் தர்பார் திரைப்படம் அரசியல் கதைகளத்துடன் உருவாகி வருகிறது. இதனால் பாடல் வரிகளிலும் அரசியல் அனல் பறக்கிறது. அண்ணாத்த சேதி பாடல் வெளியாகி இருப்பதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











