இன்று மாலை காத்திருக்கும் தரமான சம்பவம்.. விஜய் சேதுபதி தகவல்.. குஷியில் ரசிகர்கள்!
சென்னை: துக்ளக் தர்பார் படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாக உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் உள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசி விவசாயி, மாஸ்டர், மாமனிதன், லாபம், கா பெ ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் மாஸ்டர், கா பெ ரணசிங்கம் உள்ளி படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதேபோல் தெலுங்கில் உப்பென்னா, இந்தியில் லால் சிங் ச்சத்தா ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் ஆகவுள்ளது

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.
அதோடு நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துக்ளக் தர்பார் திரைப்படம் அரசியல் கதைகளத்துடன் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அண்ணாத்தே சேதி என்ற சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த தகவலால் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











