ஷாக்கிங்.. 20 வயசு இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த சம்பவம்
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃபின் சிறு வயது கதாபாத்திரங்களில் நடித்து வந்த இளம் நடிகை துனிஷா ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அலி பாபா தஸ்தான் இ காபூல் எனும் இந்தி டிவி சீரியலில் நடித்து வந்த 20 வயது இளம் நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட் செட்டிலேயே துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், படக்குழுவினரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

20 வயசு தான் ஆகுது
பாலிவுட்டில் அடிக்கடி இளம் வயது நடிகர்கள் திடீரென தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக மாறி உள்ளது. இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்தே ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வந்த டிவி நடிகை துனிஷா சர்மா வெறும் 20 வயதில் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களையும் பாலிவுட் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

குட்டி கத்ரீனா கைஃப்
பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான Fitoor திரைப்படத்தில் அவரது இளம் வயது போர்ஷனில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி இருப்பார் நடிகை துனிஷா சர்மா. பார் பார் தேக்கோ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருப்பார்.

மேக்கப் ரூமில் தற்கொலை
Ali Baba: Dastaan-E-Kabul எனும் டிவி தொடரில் நடித்து வந்த நிலையில், மேக்கப் ரூமில் இருந்து துனிஷா சர்மா வெளியே வரவில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள பல முறை கால் செய்தும் எடுக்கவில்லை அதனால் டோரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த நிலையில், அவர் தூக்கிட்டு கிடந்தது தெரிய வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என சக நடிகர் ஷீசான் முகமத் கான் தெரிவித்துள்ளார்.

உயிர் போயிடுச்சு
உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் கூறினர் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











