முதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்

By Siva

Recommended Video

தூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்- வீடியோ

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விளாசியுள்ளார்.

தூத்துக்குடியில் தங்களின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகினர். போராடும் மக்களை சந்திக்க கமல் ஹாஸன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழக அரசை விளாசி ட்வீட்டியுள்ளார்.

பிரகாஷ் ராஜ்

போராடும் பொதுமக்களை கொல்வதா..முதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மக்களின் போராட்டக் குரல் கேட்கவில்லையா, மாசு குறித்த மக்களின் துயரம் தெரியவில்லையா, இல்லை அதிகாரத்தில் இருக்க மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதில் பிசியாக உள்ளதா என்று கேட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

கார்த்தி

தூத்துக்குடியில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

சேரன்

வாழ்வை உயிரைப்பறிக்கும் தொழில்வளர்ச்சி தேவையா என யோசிக்காத அரசாங்கம் நமக்கு தேவையா.மக்கள் உணரவேண்டும்.மாற்றம் காணாமல் மாண்டுபோகவா பிறந்தோம் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுசீந்திரன்

நம் கவனத்தை திசை திருப்ப பல்வேறு செய்திகள் முன்னிலைப்படுத்தப்படும் இம்முறை அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X