தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest
Recommended Video

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கலகக்கார குழுக்கள் தான் காரணம் என்று நடிகை கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்றும், குடிக்க சுத்தமான நீரும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 17 வயது சிறுமியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகா நாயர்
சில கலகக்கார குழுக்களால் தான் தூத்துக்குடியில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது என்று நடிகை கார்த்திகா நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை
கார்த்திகா நாயரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நீங்கள் என்ன ரா அல்ல உளவுத் துறையில் பணியாற்றுகிறீர்களா?. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி வெனிஸ்டா, 19 வயது கல்லூரி மாணவர் கார்த்திக் எல்லாம் கலகக்கார குழு என்று உங்களுக்கு தெரியுமா. ஷட் அப் என்று கமெண்ட் போட்டுள்ளார்.
ஆங்கிலம்
முதலில் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அமைதிப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்களால் அப்பாவி உயிர்கள் போயுள்ளது. இறந்தவர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் என்று நான் கூறவில்லை என்று கார்த்திகா பதில் அளித்துள்ளார்.
தமிழகம்
தமிழக மக்கள் அவர்களின் போராட்டங்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு கலகக்காரர்கள் யார்? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி
தூத்துக்குடி போராட்டத்தில் கலகக்காரர்களால் வன்முறை வெடித்தது என்று கருத்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜியை மக்கள் விளாசிய நிலையில் கார்த்திகாவும் அதையே கூறி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











