»   »  தேவிப்பிரியா, உட்-பி, ப்ளூ பிலிம் கும்பல்!

தேவிப்பிரியா, உட்-பி, ப்ளூ பிலிம் கும்பல்!

Subscribe to Oneindia Tamil

டிவி நடிகை தேவிப்ரியா திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள வில்லியம் ஐசக்குக்கு, நீலப் படம் எடுக்கும் கும்பலுடன்தொடர்பு இருப்பதாக அவரது முதல் மனைவி ஸ்டெல்லா கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் விசிடி கடை வைத்திருப்பவர் வில்லியம் ஐசக். இதுதவிர கோழிப் பண்ணையும் நடத்தி வருகிறார். இவரது மனைவிஸ்டெல்லா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று விட்டனர்.

திருமணத்தின் போது வரதட்சணையாக பெற்ற பணத்தை ஐசக் திருப்பித் தர வேண்டும் என்று ஸ்டெல்லா வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தின்அறிவுறுத்தலின் படி அடையாறு மகளிர் போலீசார் ஸ்டெல்லாவின் புகாரை விசாரித்தனர்.

இந்த வழக்கில் ஐசக்ககின் தாயார் குளோரி கைது செய்யப்பட்டார். ஐசக் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் ஐசக்குக்கும், நடிகை தேவிப்ரியாவுக்கும் வரும் 19ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் கல்யாணத்துக்குமுன்பே தொடர்பு உண்டாம்.

இந் நிலையில் ஐசக் மீது அவரது முதல் முனைவி கொடுத்த புகாரின் பேரில் அவர் போலீஸாரால் தேடப்பட்டு வருவதால் பெரும் பரபரப்புஎழுந்துள்ளது.

மேலும், ஐசக் ஏற்கனவே 3 பெண்களை மணந்துள்ளதாகவும், அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் ஸ்டெல்லா சரமாரியாககூறி வருகிறார். இந்த நிலையில் நீலப் படம் எடுக்கும் கும்பலுடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டெல்லா கூறுகையில், ஐசக் முதலில் விசிடி கடைதான் வைத்திருந்தார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உண்டு. அது பற்றிதெரிந்தும், அவரது வீட்டில் விசாரித்தோம். ஐசக் திருந்திவிட்டான். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கல்யாணம் நின்றால் மானம் போய்விடும் என்றுஐசக்கின் தாய் குளோரி கெஞ்சியதால் தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.

ஆனால் 3 மாதம் சேர்ந்து வசித்தேன். அவரது நடவடிக்கை பிடிக்கததால் பின்னர் பிரிந்து விட்டேன். நடிகை தேவிப்ரியாவுடன் அவருக்கு நீண்டநாட்களாக தொடர்பு இருந்தது. அவருடன் நான் வாழ்ந்த போது, நள்ளிரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். என்னை எழுப்பி டிவியில் ஆபாசப்படங்களை போட்டு காட்டுவார். பார்க்க மறுத்தால் அடித்து, உதைப்பார்.

அவருக்கு ஆபாசப் படம் எடுக்கும் கும்பலுடன் தொடர்பு உண்டு. ஆபாச சிடிகளை தயாரித்து விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலைஆகியிருக்கிறார். என் கண் முன்பாகவே சில பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அப்போதே நான் போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தால் அவரை கையும் களவுமாக பிடித்திருக்கலாம். நீலாங்கரையில் அவர் நடத்தும் வீடியோ கேம்மையத்தில் ஆபாசப் படங்கள் எடுக்கும் வேலைகள் நடப்பதாக தெரிகிறது. அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உண்டு.

நான் பிரிந்து சென்ற சில நாட்களிலேயே ஹேமமாலினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஹேமமாலினிக்கு ஒரு குழந்தை பிறந்தது. என்வாழ்க்கையை கெடுத்தது போல, ஹேமமாலினி வாழ்க்கையையும் ஐசக் கெடுத்து விட்டார்.

அடுத்ததாக தேவிப்ரியாவின் தங்கை மீனாகுமாரியை காதலித்தார். அவரையும் பதிவு திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகள் குடும்பம்நடத்தினார். அதன் பின்னர் ஐசக்கின் போக்கு பிடிக்காததால், அவர் போட்ட கல்யாண மோதிரத்தை மீனா குமாரி கழற்றி கொடுத்து விட்டு பிரிந்துவிட்டார்.

அதன் பின் தேவிப்ரியாவை காதலித்தார். ஐசக்கை கைது செய்து விசாரித்தால் ஆபாசப் பட விவரங்கள் கூறித்து தகவல்கள் கிடைக்கும்.

ஹேமமாலினிக்கும், ஐசக்கிற்கும் நடந்த பதிவுத் திருமணம் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவரை விசாரித்தால் ஐசக் குறித்த பலபரபரப்புத் தகவல்கள் கிடைக்கும் என ஸ்டெல்லா கூறினார்.

இதற்கிடையே, ஐசக்குக்கும், தனக்கும் நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தும் சதியே ஸ்டெல்லாவின் புகார் என்று தேவிப்பிரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சில ஆண்டுகாளக நாங்கள் காதலித்தோம். அவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்கிறார். மும்தாஜ் நடிக்கும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதை கெடுக்கும் விதமாகத்தான் ஆபாசப் படத்தில் நடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனக்கும் ஐசக்கிற்கும் 19ம் தேதி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த பொய் புகார் கொடுத்துள்ளனர். அந்த தேதியில் நடக்காவிட்டாலும், நாங்கள்கட்டாயம் திருமணம் செய்து கொள்வோம்.

ஐசக்தான் என் கணவர். இறந்தாலும், ஐசக்கின் மனைவியாகத் தான் இறப்பேன். என்னை விட 8 வயது குறைந்த என் தங்கையுடன் (முதலில் பிரியாஎன் தங்கையே இல்லை என்றார் தேவிப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது) என் வருங்கால கணவரை இணைத்து பேசுவது மிகவும் தவறான செயல்என தேவிப்ரியா கூறினார்.

போலீசில் ஹேமமாலினி புகார்:

இதற்கிடையில் தேவிப்ரியா-ஐசக் கல்யணத்தை தடுத்து நிறுத்துங்கள் என ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அடையாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

நான் ஐசக்கை திருமணம் முடிந்து சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம். சுமார் 10 மாதம் கழித்து நான் கர்ப்பம் அடைந்தேன். நான் கர்ப்பிணிஆனவுடன் ஐசக் என்னுடன் தங்குவதை நிறுத்திக் கொண்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது என்னை மிரட்டினார். அப்போது தான் அவர் பல பெண்களோடு உறவு வைத்திருப்பது தெரியவந்தது. டிவிநடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கை பிரியாவுடன் மகாபலிபுரம் சென்று உல்லாசமாக ஊர் சுற்றி வருவது தெரியவந்தது.

என்னைப் போலவே தாம்பரத்தை சேர்ந்த ஸ்டெல்லாவையும் அவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. கடந்த 8 வருடங்களாக தேவிப்ரியாவுடன்கள்ள தொடர்பு வைத்துக் கொண்டுள்ள ஐசக். கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு தான் தேவிப்ரியாவின் தங்கை ப்ரியாவை திருமணம் செய்தார்.

அவர் மீதான மோகம் தீர்ந்து தற்போது அவரது அக்கா தேவிப்ரியாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இவை அனைத்தும்தேவிப்ரியாவுக்கு தெரியும். தேவிப்ரியா தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஐசக்கிடம் கொடுத்து வைத்துள்ளார். அவர் பெயரில் பல லட்சம்மதிப்புள்ள சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார்.

இந்த பணம் அனைத்தும் தேவிப்ரியாவும், ஐசக்கும் வேறுவிதமாக சம்பாதித்தவை. எனவே தான் சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காக அவர் ஐசக்கை திருமணம் செய்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார்.

நான், ஸ்டெல்லா, ப்ரியா உள்பட ஏராளமான பெண்களை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டு எங்களை வாழ்க்கையை கெடுத்த ஐசக் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த தேவிப்ரியாவுடன் அவர் திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்என அவர் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil