நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த சீரியல் நடிகர் கைது... ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள்!

By

மும்பை: நடந்து சென்ற பெண்ணிடம் பர்ஸை பறித்த டி.வி.சிரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் வாசி பகுதியை சேர்ந்தவர், அருணா நாயர். இவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சாலையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பைக், வேகமாக வந்தது. இவர்கள் அருகில் வந்ததும் பைக்கின் வேகம் குறைந்தது.

கைப்பையை இழுத்தார்

கைப்பையை இழுத்தார்

அருணா நாயரும் அவர்களும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர், திடீரென்று அருணா நாயர் வைத்திருந்த கைப்பையை பிடித்து இழுத்தார். இதில் நிலை தடுமாறிய அருணா, பையை உடனடியாக விட்டுவிடவில்லை. பைக் நபர் வேகமாக இழுத்ததும், அருணா கீழே விழுந்தார். தரையில் சில தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், அவரது முன் பல் உடைந்து ரத்தம் கொட்டியது.

மடக்கிப் பிடித்தனர்

மடக்கிப் பிடித்தனர்

தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது. கைப்பை கிடைத்ததும் அந்த நபர், பைக்கில் பறந்தார். அங்கிருந்தவர்கள், திருடன் திருடன் என்று கத்தினர். உடனடியாக அருகில் சென்று கொண்டிருந்த சிலர், பைக்கில் சென்றத் திருடனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் மாணிக்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்ததும் ஒப்படைத்தனர்.

சினிமா இயக்குனர்

சினிமா இயக்குனர்

இந்த சம்பவம் அப்படியே அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதற்கிடையே, காயமடைந்த அருணா நாயரை, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைப்பையை திருடிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சினிமா இயக்குனர் என்பதும் நடிகர் என்பதும் தெரியவந்தது.

கிரைம் தொடர்கள்

கிரைம் தொடர்கள்

இதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பெயர் புனித் சிங். சில இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கிரைம் தொடர்களில் அதிகமாக நடித்துள்ளார். அவர் படமும் இயக்கியுள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். இந்த தகவலை மணிக்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X