2 நாளுக்கு ரூ.2 லட்சம் கேட்ட மருத்துவமனை.. எங்கிட்ட ஒரு பைசா இல்லை..பிரபல டிவி நடிகர் பரிதாபம்!
மும்பை: மருத்துவமனையில் 2 நாளுக்கு ரூ.2 லட்சம் பில் கேட்டார்கள், என்னிடம் தற்போது ஒரு பைசா கூட இல்லை என்று டிவி.நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான இவர், இந்தியில், 'நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ' என்ற படத்தில் போலீஸாக நடித்து புகழ்பெற்றவர்.
மேலும், ஹோம் டெலிவரி, மேரே பஹேலா பஹேலா பியார், ராஜா நட்வாரியல், பர்கா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

உடல்நிலை
பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தம் தமா தம், யெஸ் பாச், ரீமிக்ஸ், மேரே ஆங்னே மே, ஆரம்ப் உட்பட பல தொடர்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பல ஆங்கில படங்களுக்கு இந்தி டப்பிங்கும் பேசியுள்ளார். இவர் கடந்த 18 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு
தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தன்னிடம் சிகிச்சைக்குப் பணம் இல்லை என்றும் தனக்கு டயாலிஸ் செய்வதற்கு உதவுங்கள் என்றும் தனது பேஸ்புக்கில் கூறியிருந்தார். இது பாலிவுட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடன் நடித்த சக நடிகர்கள் உதவி உள்ளனர்.

மக்கள் வருகிறார்கள்
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னிடம் 2 லட்சம் ரூபாய் இருந்தது. நான் மருத்துவனையில் சேர்ந்த இரண்டு நாளிலேயே ரூ.2 லட்சம் பில் என்றார்கள். இருந்த பணத்தைக் கொடுத்து விட்டேன். அடுத்து சிகிச்சைக்கும் மருந்துக்கும் என்னிடம் ஒரு பைசா இல்லை. இதனால் உதவி கேட்டேன். எனக்கு உதவ மக்கள் முன் வருகிறார்கள்.

ஜனவரி மாதமும்
நான் இப்போது காஸ்ட்லியான ஸ்பெஷல் வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளேன். கொரோனாவுக்காக தனியாக என்னை வைத்துள்ளனர். மருந்துகளும் ஊசிகளும் இங்கு காஸ்ட்லியாக இருக்கின்றன. என்ன செய்வதென்று தெரியவில்லை. கடந்த வருடம் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டேன். இப்போது டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது.

பிழைப்பேனா?
சிரீயசான நிலையில் நான் இருக்கிறேன். நான் குணமாகிவிடுவேன் என்று நம்பவில்லை. நான் பிழைப்பேனா இல்லையா என்பதை இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்து கொள்வீர்கள்' என்று கூறியுள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதமும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இப்போது மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











