மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் ஷிவானியின் 'பகல்நிலவு' காதலர் அசீம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: பகல் நிலவு சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரபல டிவி நடிகர் அசீம். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி வரை அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவே இல்லை. அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தார்.

ஷிவானியுடன் காதல்

ஷிவானியுடன் காதல்

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஷிவானி நாராயணனுடன் கிசுகிசுக்கப்பட்டார் அசீம். இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியது. இதனால் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறப்பட்டது.

அசீம் காதலிக்கவில்லை

அசீம் காதலிக்கவில்லை

அதேநேரத்தில் ஷிவானிதான் அசீமை ஒரு தலையாக காதலித்தார். அசீம்முக்கு ஷிவானி மீது காதல் இல்லை என்றும் ஷிவானியின் காதலை அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4

இதனால் தான் ஷிவானி பகல் நிலவு சீரியலில் இருந்து திடீரென விலகினார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில்தான் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஷிவானி நாராயணன் பங்கேற்றார்.

பாலாஜிக்கு ஊட்டிவிட்டு..

பாலாஜிக்கு ஊட்டிவிட்டு..

மேலும் சகபோட்டியாளரான பாலாஜியுடன் ரொம்பவே நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, மசாஜ் செய்து விடுவது என இருந்து வந்தார். இதனால் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் காதல் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

அசீம் குவாரண்டைன்

அசீம் குவாரண்டைன்

இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அசீம் வைல்டு கார்ட் என்ட்ரியானால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வைல்டு கார்ட் என்ட்ரிக்காக அசீம் குவாரண்டைனிலும் வைக்கப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவில்லை.

விவாகரத்து பெற்றுவிட்டேன்

விவாகரத்து பெற்றுவிட்டேன்

இந்நிலையில் அசீம் தனது மனைவி சையத் சோயாவை சட்டப்படி பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அசீம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம்! எங்கள் இரு தரப்பிலும் பரஸ்பர அக்கறையுடன் நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்! தயவுசெய்து எனது திருமண நிலை குறித்து எந்தவொரு தனிப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டாம்!" என பதிவிட்டுள்ளார்.

பிரபல சீரியல்களில்..

பிரபல சீரியல்களில்..

அசீம் தமிழ் சின்னத்திரையில் வாணி போஜனுடன் மாயா என்ற
சீரியலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான மாயா, பகல் நிலவு, பிரியமானவள், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X