சென்னையில் அதிகாலையில் பயங்கரம்.. டிவி நடிகர் சரமாரி வெட்டிக்கொலை.. பொதுமக்கள் அதிர்ச்சி!

By

சென்னை: டிவி தொடர் நடிகர் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்.

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில், தொகுப்பாளர் ஜாக்குலின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வள்ளல்பாரி தெரு

வள்ளல்பாரி தெரு

அவர் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். மற்றும் உஷா எலிசெபத், பி.ஆர்.வரலட்சுமி, அஞ்சலி பிரபாகரன், அஷ்ரிதா உள்பட பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடரில், துணை நடிகராக நடித்திருப்பவர் செல்வரத்தினம். வயது 45. இவர் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வள்ளல்பாரி தெருவில் வசித்து வந்தார்.

ஆட்டோவில் அதிகாலை

ஆட்டோவில் அதிகாலை

இலங்கையை சேர்ந்த இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு உள் கட்டமைப்பு கான்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ஆட்டோவில் வந்த 4 பேர், செல்வரத்தினம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சரமாரியாக வெட்டினர்

சரமாரியாக வெட்டினர்

அங்கு வீட்டுக்குள் இருந்த செல்வரத்தினத்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

சம்பவ இடத்திற்கு

சம்பவ இடத்திற்கு

அதற்குள் பிறகு வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதற்கு முன்னதாக, அருகில் இருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் போட்டி

தொழில் போட்டி

ரியல் எஸ்டேட் மற்றும் வீடு உள்கட்டமைப்பு வேலையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகக் செல்வரத்தினம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X