அவர பார்த்த பிறகு எனக்கு தூக்கமே வரல.. வடிவேல் பாலாஜிக்காக முன்பே உதவி கேட்ட நடிகர்.. வைரல் வீடியோ!

சென்னை: வடிவேல் பாலாஜிக்காக டிவி நடிகர் மகேஷ் உதவிக்கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 45 வயதே ஆன நடிகர் வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

விஜய் டிவியின் பிரதான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேல் பாலாஜி கடந்த 15 நாட்களாக உடல் நலக்குறைவால் மரணத்துடன் போராடி வந்துள்ளார்.

கலக்கம்

கலக்கம்

அறுவை சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி வடிவேல் பாலாஜியின் உயிர் பிரிந்தது. அவரது மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் கலங்க செய்துள்ளது.

உதவிக்கேட்ட நடிகர்

உதவிக்கேட்ட நடிகர்

இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜிக்காக, அவரது நண்பரும் சக டிவி நடிகருமான ஈரோடு மகேஷ் சில நாட்களுக்கு முன்பு உருக்கமாக உதவிக்கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர் ரவீந்தரின் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.

உருக்கம்

உருக்கம்

அப்போது, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்காக உதவி கேட்டு அவர் உருக்கமாக பேசியுள்ளார். வடிவேல் பாலாஜி கடந்த 15 நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நொறுங்கிப் போன நடிகர்

நொறுங்கிப் போன நடிகர்

இதனை அறிந்து சக நடிகரான ஈரோடு மகேஷ் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, வாதம் ஏற்பட்டு கை கால்கள் செயலற்று கிடந்த வடிவேல் பாலாஜியை பார்த்து நொறுங்கி போய்விட்டார். மருத்துவ செலவுக்கான பணத்தை கொடுத்து, வேண்டிய உதவிகளை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் மகேஷ்.

என்ன தவறு செய்தார்?

என்ன தவறு செய்தார்?

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு, வடிவேல் பாலாஜியின் நிலைமையை பார்த்து தூக்கமே வராமல் தவித்துள்ளார். அவருடைய பல நகைச்சுவை வீடியோக்களை போட்டு போட்டு பார்த்துள்ளார். என்ன தவறு செய்தார்? அவருக்கு ஏன் இந்த நிலைமை?

இப்படி ஒரு நிலைமையா?

இப்படி ஒரு நிலைமையா?

தவறு செய்தவர்கள் எல்லாம் கண் முன் நன்றாக இருக்கும் போது பலரையும் சிரிக்க வைத்த அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என கலங்கிவிட்டார். பின்னர் பலரிடமும் வடிவேல் பாலாஜிக்காக உதவிக் கேட்டு தொடர்பு கொண்டுள்ளார். பல பிரபலங்களிடமும் பேசியிருக்கிறார் ஈரோடு மகேஷ்.

சுறுங்கி போயிருக்கிறது

சுறுங்கி போயிருக்கிறது

அறுவை சிகிச்சைக்காக பணம் ஏற்பாடு செய்யக்கூட முடியாத அளவுக்கு ஒரு கலைஞனின் வாழ்க்கை சுறுங்கி போயிருக்கிறது என்றார். இந் நேர்காணலில் பங்கேற்பதற்கு முன்புகூட வடிவேல் பாலாஜியின் சகோதரர் தன்னை உதவிக்காக தொடர்பு கொண்டதை குறிப்பிட்ட மகேஷ் அவரது மருத்துவ சிகிச்சைக்காக, இந்த நேர்காணல் மூலம் உதவி கேட்டார்.

லக்ஸுரியஸ் வாழ்க்கை அல்ல

லக்ஸுரியஸ் வாழ்க்கை அல்ல

மேலும் நீங்கள் நினைப்பது போல எந்த ஆர்ட்டிஸ்டுமே லக்ஸுரியஸான ஒரு வாழ்க்கையை வாழவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஏதோ ஒன்றிரண்டு பேர்தான் அப்படி இருக்கிறார்கள். மற்ற எல்லாருமே மிக சாதாரண ஒரு குடும்ப வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இரங்கல்

இரங்கல்

தற்போது வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில் அவருக்காக ஈரோடு மகேஷ் உதவிக் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X