கொரோனா லாக்டவுனால் ஏகப்பட்ட கடன்..வீட்டில் வறுமை..விரக்தியில் டிவி நடிகர் தூக்குப் போட்டு தற்கொலை

By

மும்பை: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட கடன் காரணமாக, விரக்தியில் பிரபல டிவி நடிகர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,872 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சோனல் வெங்குர்லேக்கர்

சோனல் வெங்குர்லேக்கர்

அவர்களின் பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. சினிமா மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பணிகள் முடங்கி இருப்பதால், அதையே நம்பி இருக்கும் பலர் வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் டிவி நடிகை, சோனல் வெங்குர்லேக்கர், தனது மேக்கப் மேன், தனக்கு பணம் கொடுத்து உதவியதாகத் தெரிவித்திருந்தார்.

விரக்தியில்

விரக்தியில்

இந்நிலையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் வறுமை மற்றும் கடன் காரணமாக, விரக்தியில் தற்கொலை செய்துள்ளார். மன்மீத் கிரேவல் என்ற அந்த நடிகர், சில இந்தி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக வாய்ப்பில்லாமல் இருந்த மன்மீத், லாக்டவுன் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

தற்கொலை

தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த அவர், நவி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது வயது 29. இதையடுத்து அவர் மனைவி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், கொரோனா பீதி காரணமாக வரவில்லை. பின்னர் சிலர் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மன்மீத் கிரேவால், இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

லாக்டவுனால் ஏற்பட்ட வறுமை காரணமாக நடிகர் ஒருவர் இறந்திருப்பது, சின்னத்திரை நடிகர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக, இந்தி சின்னத்திரை நடிகர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சின்னத்திரை நடிகர் சச்சின் குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஷபிக் அன்சாரி மரணமடைந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X