'சங்கை அறுப்பேன்'.. கமலுக்கு கொலை மிரட்டல்.. வழக்குக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த நடிகர்!

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான எம்.பியுமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், சனாதானத்திற்கு எதிராக பேசினால், "சங்கை அறுப்பேன்" என்று பேசிய சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் டி. ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 3ந் தேதி சென்னையில் அகரம் அறக்கட்டளையின் 20 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், நீட் தேர்வு மற்றும் சனாதன தர்மம் குறித்துப் பேசினார். அதில் பேசிய, கமல்ஹாசன் "இந்த மேடையில் பார்த்த டாக்டர்களை அடுத்தாண்டு பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே. ஏனெனில், நீட் வந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு முதல் பல மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியவில்லை. இந்தச் சட்டத்தை மாற்றக்கூடிய பலம் கல்விக்கு மட்டுமே உண்டு. சர்வாதிகாரச் சங்கிலிகளையும், சனாதனச் சங்கிலிகளையும் நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி. பெரும்பான்மை மூடர்களால் அறிவு தோற்கடிக்கப்படாமல் இருக்க, கல்வியை மட்டுமே ஆயுதமாக ஏந்துங்கள் என்று பேசி இருந்தார்.

Kamal haasan MP Serial actor
Photo Credit:

சின்னத்திரை நடிகர் மீது வழக்கு: கமலின் இந்த பேச்ச கண்டித்து பேசிய, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் சனாதனத்திற்கு எதிராகப் பேசியதற்காக கமல்ஹாசனின் "சங்கை அறுப்பேன்" என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஏ.ஜி. மௌரியா பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், திங்களன்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் இந்த மனுவை விசாரித்தார். இவ்வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த நோக்கத்தில் பேசவில்லை: மேலும், யூடியூப்பில் தான் பேசிய கருத்துகள் "திட்டமிடப்படாதவை" என்றும், அவை உண்மையான அச்சுறுத்தல் இல்லை என்றும், எந்தவொரு ஆரம்பகட்ட விசாரணையும் இன்றி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட குற்ற எண் பற்றி தனக்குத் எதுவும் தெரியாது என்றும், கமல்ஹாசனுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், நான் "மரியாதைக்குரிய குடும்பப் பின்னணியில்" இருந்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், தனது முன்ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்கும்போது விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அந்த ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X