twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை நடிகர் சங்கப் பிரச்சனைகள் பெப்ஸி மூலம் தீர்ந்தது.. சங்கத் தலைவர் ரவிவர்மா தகவல்!

    By
    |

    சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கப் பிரச்சனை பெப்ஸி மூலம் தீர்ந்துவிட்டதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.

    சின்னத்திரை நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா.

    தொடையை காட்டி... மிரட்டல் கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்த கேத்தரின் !தொடையை காட்டி... மிரட்டல் கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்த கேத்தரின் !

    துணைத் தலைவராக மனோபாலா இருக்கிறார். ரவி வர்மாவுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    சங்கத்தில் நீக்கம்

    சங்கத்தில் நீக்கம்

    அவர் மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக நடிகர் மானோபாலாவை தேர்வு செய்தனர். இதை ரவிவர்மா ஆதரவாளர்கள் எதிர்த்தனர். சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மாவே தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று அவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    பிரச்னை தீர்ந்தது

    பிரச்னை தீர்ந்தது

    இந்நிலையில், சங்கத்தின் பிரச்னை தீர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி ரவிவர்மா செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: கடந்த மூன்றுமாதச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்தப் பிரச்னை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    சில நாட்களுக்கு முன்பு, சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் என் தலைமையிலான சங்கம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம்.டி.மோகன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

    புதிய நிர்வாகிகள்

    புதிய நிர்வாகிகள்

    மனோபாலா ராஜினமா செய்தார். செயற்குழு உறுப்பினர்களாக இருந்த சிலர் ராஜினாமா செய்தனர். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சின்னத்திரை நடிகர் சங்கம் சார்ந்து நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டது. சங்க அலுவலகம் இன்றே திறக்கப்பட்டுவிட்டது.

    நிரந்தரத் தீர்வு

    நிரந்தரத் தீர்வு

    உறுப்பினர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம். சங்கத்திற்குப் புதிய இடம் வாங்கிக் கட்டடம் கட்டித் திறப்பு விழா செய்யும் திட்டத்தோடு பணிகளைத் தொடங்குகிறோம். இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிக்கப்பட்டு விட்ட பின்னும் மனோபாலா தரப்பு, குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண விரும்பினோம்.

    வெற்றிப் பெற்றேன்

    வெற்றிப் பெற்றேன்

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் விஷயத்தைச் சொன்னோம். அவர் முன்னிலையில் கூடி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 11 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிப் பெற்றேன். இவ்வாறு ரவிவர்மா கூறினார்.

    English summary
    Ravi Varma, the president of the TV Actors' Association, has said that the problems in the association has been solved.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X