திருமணம் செய்வதாகக் கூறி.. 2 வருடம் பாலியல் வன்கொடுமை.. இயக்குனர் மீது டிவி நடிகை திடீர் புகார்!
மும்பை: திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது டிவி நடிகை கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் செய்வதாகக் கூறி நடிகைகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக, சில வட இந்திய டிவி நடிகைகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

சிரீயல் நடிகை
இந்நிலையில், மேலும் ஒரு இந்தி சிரீயல் நடிகை, காஸ்டிங் இயக்குனர் மீது பரபரப்பு புகாரை கொடுத்திருக்கிறார். மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை அவர். சில டிவி தொடர்களிலும் வெப் சீரிஸ்களும் நடித்திருக்கிறார். இவர் மும்பை வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

நெருங்கிப் பழகினேன்
அதில், காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாகக் கூறினார். இதையடுத்து அவருடன் நெருங்கிப் பழகினேன். கடந்த 2 ஆண்டுகளாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பித்ததும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

நெருங்கிப் பழகினேன்
அதில், காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாகக் கூறினார். இதையடுத்து அவருடன் நெருங்கிப் பழகினேன். கடந்த 2 ஆண்டுகளாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பித்ததும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

காஸ்டிங் இயக்குனர்
அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இந்தப் புகார் குறித்து போலீசார், காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை கடந்த மாதம் 16 ஆம் தேதி போலீசில் புகார் கொடுத்ததாகவும் 25 ஆம் தேதிதான் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார், அந்த நடிகை.

வழக்குப் பதிவு
போலீசார் கூறும்போது, ஆயுஷ் திவாரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர் என்று கூறினர். டி.வி. நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











