திருமணத்திற்கு மறுத்த காதலன்.. விஷம் குடித்து பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் வீடியோ!
சென்னை: காதலன் ஏமாற்றியதால் பிரபல சீரியல் நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலம் ஹசன் மவாட்டத்தில் உள்ள பெலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனா. 29 வயதான சந்தனா, அம்மாநில தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானவர்.
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

விஷம் குடித்து
இவர் தினேஷ் என்ற இளைஞரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி காதலனுடன் ஏற்பட்ட தகராறால் மன வேதனை அடைந்த சந்தனா, விஷம் குடித்துள்ளார்.

நடிகை மரணம்
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடிகை சந்தனா உயிரிழந்த தகவலை கேட்டு திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் பணியாற்றிய சின்னத்திரை கலைஞர்களும் சோகம் அடைந்துள்ளனர்.

காதலன்தான் காரணம்
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சந்தனா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த செல்பி வீடியோ சிக்கியுள்ளது. அதில் தனது இந்த முடிவிற்கு காரணம் தனது காதலன் தினேஷ்தான் என கூறியுள்ளார்.

விஷம் குடித்துக்கொண்டே
தனது காதலான தினேஷ் , 5 வருடங்களாக தன்னை காதலித்துவிட்டு தன்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். விஷம் குடித்துக்கொண்டே சந்தனா இந்த செல்பி வீடியோவை எடுத்துள்ளார்.

மனம் மாறிய காதலன்
இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் நெருக்கமாக பழகியதால் இரு குடும்பத்தாரும் திருமணம் செய்ய முடிவு செய்ததும், ஆனால் கடைசி நேரத்தில் தினேஷ் தனது மனதை மாற்றிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

ரூ. 5 லட்சம் கடன்
இதனால் உடைந்து போன சந்தனா தற்கொலை முடிவை எடுத்ததும் தெளிவானது. மேலும் தினேஷ், சந்தனாவிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதும், அதனை திரும்ப தராமல் ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தினேஷை கைது செய்துள்ளனர்.

அதிர்ச்சி
கடந்த வாரம், டிவி நடிகையான மெபினா, சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











