காதலித்து திருமணம் செய்துவிட்டுப் பிரிவதா..? கணவரோடு சேர்த்து வைக்கக் கோரி டிவி நடிகை புகார்!

By

எடப்பாடி : கணவரோடு சேர்த்து வைக்கக் கோரி டிவி துணை நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

எடப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர், சவுந்தரராஜன் (31). இவர், கிள்ளியூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது சமூக வலைதளம் மூலம் ஷீலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் சின்னத்திரை தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

காதலாக மாறியது

காதலாக மாறியது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த நடிகை ஷீலாவுக்கும் சவுந்தரராஜனுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு, கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் பிரச்னை இருந்து வந்தது.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அதைக் கண்டு கொள்ளாமல் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷீலாவை பிரிந்த சவுந்தரராஜன், சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு அவரது சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க அவர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதுபற்றிய தகவல் ஷீலாவுக்குத் தெரியவந்தது.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

இதையடுத்து எடப்பாடி போலீசில் நடிகை ஷீலா புகார் செய்தார். அந்த புகாரில், கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் நானும் சவுந்தராஜனும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நன்றாகத்தான் எங்கள் குடும்ப வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. வெவ்வேறு சாதி என்பதால் வேறு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதனால் என் கணவர் என்னுடன் வாழ மறுக்கிறார்.

வீடியோ பதிவுகள்

வீடியோ பதிவுகள்

அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். எங்களை பிரிக்கும் அவரது தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவுகளை, போலீசாரிடம் ஆதாரமாக நடிகை ஷீலா கொடுத்துள்ளார். இதையடுத்து இருவருடமும் விசாரணை நடத்திய போலீசார் பிரச்னையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X