கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த அசிங்கம்.. பணம் கேட்டு மிரட்டும் கும்பல்.. நடிகை போலீசில் புகார்!
சென்னை: சீரியல் நடிகை பெங்களூருவில் நடந்த நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற போது, அங்கிருந்த கழிவறையை பயன்படுத்தினேன். அதை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு, இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் கோரமங்களாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்
பங்கேற்பதற்காக அந்த நடிகை 7ந் தேதி சென்றுள்ளார். இதையடுத்து மைதானத்தில் உள்ள பெண்கள் கழிவறையை அவர் பயன்படுத்தி உள்ளார். அதை அடையாளம் தெரியாத, மர்ம நபர் ஒருவர் செல்போனில் அந்த நடிகையை ஆபாசமாக வீடியோவாக எடுத்துள்ளார்.

ஆபாச வீடியோ: இந்த வீடியோவை நடிகையின் தோழியின் இன்ஸ்டாகிராமில் அந்த மர்ம நபர் அனுப்பி உள்ளார். அது நடிகையின் இன்ஸ்டாகிராம் என நினைத்து நடிகையின் தோழிக்கு 4 ஆபாச வீடியோக்களை அந்த மர்ம நபர் நடிகையின் தோழிக்கு அனுப்பி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகையின் தோழி, உடனடியாக இதுகுறித்து நடிகைக்கு தகவலை கூறியுள்ளார். இதையடுத்த அந்த மர்ம நபர், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் வந்து, இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் நடிகையின் தோழியை மிரட்டி இருக்கிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்: இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, இது தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடிகையை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், நட்சத்திர கிரிக்கெட் போட்டி மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications