போதை பொருள் விவகாரம்.. பிரபல டிவி சீரியல் நடிகையிடம் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை!

பெங்களுரு: போதை பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல டிவி சீரியல் நடிகையிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து போதை பொருள் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

பாலிவுட் மட்டுமின்றி கன்னட சினிமாவிலும் போதை பொருள் புழக்கம் எல்லை மீறியிருப்பது தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

போதை பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கைதாகியுள்ளனர். ராஹினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போதை பொருள்

போதை பொருள்

இந்நிலையில் கன்னட வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையை சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும் போதை மருந்து பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் பிரம்ஹந்து என்ற டிவி சிரியலில் லீடிங் ரோலில் நடித்து வருபவர் கீதா பாரதி பட். இவருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

கிடுக்கிப்பிடி விசாரணை

அதன்படி நேற்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவின் உட்பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல் நடிகர் அபிஷேக் தாஸிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரிடமும் சுமார் 6 மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணைக்கு அழைத்தார்கள்

விசாரணைக்கு அழைத்தார்கள்

விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கீதா பாரதி பட், தன்னிடம் விசாரணை நடத்திய அதிகாரியிடம் தனது போன் நம்பரை கொடுத்ததாகவும், கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அழைக்கவில்லை. விசாரணைக்கு தான் அழைத்தார்கள்.

Recommended Video

போதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு
ஒத்துழைப்பேன்

ஒத்துழைப்பேன்

நிறைய ஊடகங்கள் எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சித்தரிக்கின்றன. இது தவறு, எங்களுக்கு குடும்பங்கள் இருப்பதால் அது அவர்களை எதிர்மறையாக பாதிக்கும். அவர்கள் என்ன என்பதை அறிய நான் விசாரணைக்கு செல்ல வேண்டும் . அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், நான் எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X