சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை!

சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்காமல் கழிவு நீர் குழாயில் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க டிவி நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை- வீடியோ

சென்னை: வளசரவாக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்காமல் கழிவு நீர் குழாயில் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க டிவி நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர் 6வது தெருவில் உள்ள கழிவு நீர் குழாயை கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலையில் சில பூனைகள் சுற்றி வந்தன. இதனைக்கண்ட அப்பகுதி பால்காரர் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என குனிந்து பார்த்தார்.

அப்போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தை கிடப்பதை பார்த்த அவர் கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் வசிக்கும் பெண் ஒருவர் ஓடி வந்து கழிவு நீர் குழாயில் இருந்த குழந்தையை மீட்டார்.

சுதந்திரம் என பெயர் சூட்டல்

சுதந்திரம் என பெயர் சூட்டல்

தொப்புள் கொடியை கூட அறுக்காமல் ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அந்த பெண், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்தார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

டிவி நடிகை கீதா

டிவி நடிகை கீதா

இந்நிலையில் குழந்தையை மீட்ட அந்த பெண் பெயர் கீதா என்பதும் அவர் முன்னாள் டிவி நடிகை என்பதும் தெரியவந்துள்ளது. கீதா கார்த்திகை பூக்கள், வாணிராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தம்பிக்கு திருமணம்

தம்பிக்கு திருமணம்

எஸ்விஎஸ் நகர் 6வது தெருவில் வசித்து வரும் கீதாவின் மகளுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. தனது சொந்த தம்பிக்கு மகளை கட்டிக்கொடுத்துள்ளார் கீதா.

முதலுதவி செய்த கீதா

முதலுதவி செய்த கீதா

ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று கிடைத்த குழந்தையை ஆசையோடு தூக்கி குளிப்பாட்டி, முதலுதவி செய்த கீதா அந்த குழந்தைக்கு சுதந்திரம் என அன்போடு பெயர் சூட்டினார்.

சிறப்பாக வளர்ப்பேன்

சிறப்பாக வளர்ப்பேன்

தற்போது அந்த குழந்தையை தானே வளர்க்க வேண்டு என ஆசைப்படுகிறார் கீதா. தன்னிடம் அந்த குழந்தையை கொடுத்தால் சிறப்பாக வளர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் கீதா.

 தந்தைக்கு கடும் தண்டனை

தந்தைக்கு கடும் தண்டனை

தினமும் அந்த குழந்தையை போய் பார்த்துவிட்டு வருகிறார். குழந்தையை போய் பார்த்தால் தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது என்று கூறும் கீதா, அந்த குழந்தையின் தந்தைக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X