செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகை.. யூடியூப் லைவில் கதறி அழுது ஆதங்கம்!

சென்னை: செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதால் பிரபல நடிகை யூடியூப் லைவில் கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்துக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்துள்ளது.

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மருமகளாக நடித்திருந்தவர் ஜனனி அசோக் குமார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய கதாப்பாத்திரம் முடிவுக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார் ஜனனி.

லைவில் பேச்சு

லைவில் பேச்சு

நடிகை ஜனனி அசோக்குமார் தனது பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது அழகு குறிப்புகளை கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் யூடியூப் லைவில் வந்து ரசிகர்களிடம் உரையாடினார்.

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகள்

அப்போது தான் நடித்து வரும் சீரியலில் இருந்து தனக்கு போன் கால் வந்ததாக தெரிவித்திருக்கும் ஜனனி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இனி நடிக்க நான் மாட்டேன் என கூறியுள்ளார். தான் சின்னத்திரையில் நடிக்க வந்து நான்கில் மூன்று ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து வந்ததாக கூறினார்.

நடிகை கதறல்

நடிகை கதறல்

இனிமேல் தான் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்குத் தெரியும் என்றும் கண்ணீர்மல்க கூறினார்.
இனிமேல் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பவருக்கு உங்களது ஆதரவைக் கொடுங்கள் என்ற கூறி அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

திடீரென சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றும் இதை தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியும் கதறியிருக்கிறார். தன்னை சீரியலில் இருந்து நீக்கியதற்காக நடிகை ஜனனி கதறி அழுதிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழாதீர்கள் என ஆறுதல்

அழாதீர்கள் என ஆறுதல்

ஜனனியின் இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. விடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள் திறமைக்கு வாய்ப்புகள் கிடைக்கும், அழாதீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X