கிடைக்கிற கேப்புல.. வில்லாக வளைந்து யோகா செய்யும் பிரபல டிவி நடிகை.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல இந்தி சீரியல் நடிகை கவிதா கெளசிக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பக்காவாக யோகா செய்து, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
வொர்க்கவுட் செய்வதிலும் யோகா போன்ற ஆரோக்கிய கலைகளை செய்வதிலும், பெண் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எஃப்.ஐ.ஆர்., நாச் பாலியே, குடும்ப் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற டிவி நடிகை கவிதா கெளசிக் யோகாவுக்காக பிரத்யேக உழைப்பை போட்டு வருகிறார்.

கடற்கரையில் முட்டிப்போட்டு
கடந்த மாதம் சென்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கடற்கரை அருகே முட்டிப்போட்ட படி வித்தியாசமான யோகாவை செய்து அசத்திய கவிதா கெளசிக், எங்கே சென்றாலும், அங்கே யோகக் கலையை செய்வது தான் தனக்கு முதலில் பிடிக்கும் என்றும், யோகா மனதை அமைதி படுத்தி ஆற்றலை பெருக்கிறது எனக் கூறியுள்ளார்.

கிடைக்குற கேப்பில்
சுற்றுலா பிரியையான நடிகை கவிதா கெளசிக் கிடைக்குற கேப்பில் இப்படி ஏகப்பட்ட யோகாவை செய்து அசத்தும் தன்மை கொண்டவர். பீச் ரெசார்ட் ஒன்றில், படிகட்டு கார்னரில், வில்லாக வளைந்தபடி தற்போது அவர் செய்துள்ள யோகா புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.

பிகினி அணிந்து
அதே இடத்தில் பிகினி அணிந்தபடி செம செக்ஸியாக கவிதா கெளசிக் கொடுத்துள்ள ஹாட் போஸ், ரசிகர்களை கிறங்கடித்து திக்குமுக்காட செய்து வருகிறது. கூந்தலை வைத்து, முன்னழகை மறைத்து இருப்பதால், மேலே ஏதும் ஆடை அணியாமல் நிற்கிறீர்களா என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நிலா மட்டுமே விளக்கு
மேலும், மற்றொரு யோகா புகைப்படத்தையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார் டிவி நடிகை கவிதா கெளசிக். பெளர்ணமி நிலவு வெளிச்சத்தில் கடற்கரையில் வில்லாக வளைந்தபடி யோகா செய்துள்ள போட்டோவை போட்டு, நிலவு மட்டுமே விளக்கு என்ற அழகான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

அருவி அருகே
ரெட் கலர் டாப் அணிந்து, கூலர்ஸ் போட்டு அருவிக்கு அருகே அழகாக நின்றபடி இருக்கும் தனது போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அருவி அழகா? நீங்க அழகா என்றே சொல்ல முடியவில்லை. நீங்கள் பதிவிடும் புகைப்படங்களும் அதற்கு கொடுக்கும் கேப்ஷன்களும் சூப்பர் என அவரது ரசிகர்கள் கமெண்ட்டில் வாய் பிளந்து அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











