For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு காலை அந்தரத்தில் நீட்டி, இன்னொரு காலை கைக்குள் மாட்டி.. என்னாம்மா யோகா செய்றாரு கவிதா!

  |

  மும்பை: பிரபல டிவி நடிகையும், பாலிவுட் நடிகையுமான கவிதா கெளசிக்கின் வெறித்தனமான யோகா போஸ் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

  ஏக்தா கபூரின் 'குடும்ப்' என்ற சீரியலில் அறிமுகமான கவிதா, எஃப்.ஐ.ஆர், சிஐடி, கும்கும், ஃபேக்புக் வித் கவிதா உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளார்.

  2004ம் ஆண்டு வெளியான ஏக் ஹசினா தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், பில்லம், ஜான்ஜீர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

  டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் சென்னை மாடல்.. இன்ஸ்டாகிராமில் இப்போ இவர் தான் இளவரசியாம்!டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் சென்னை மாடல்.. இன்ஸ்டாகிராமில் இப்போ இவர் தான் இளவரசியாம்!

  பஞ்சாபி நடிகை

  பஞ்சாபி நடிகை

  டெல்லியில் பிறந்த கவிதா கெளசிக், பாலிவுட்டில் மட்டுமின்றி பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மிண்டோ தாசில்தர்னி படம் லாக்டவுன் காரணமாக சமீபத்தில் ஜீ பஞ்சாபியில் ப்ரீமியர் செய்யப்பட்டு டி.ஆர்.பியை அள்ளியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெக் பாரதன் சலியா, நன்கான் உள்ளிட்ட பஞ்சாபி படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

  கடற்கரையில் யோகா

  கடற்கரையில் யோகா

  யோகா தினத்தை முன்னிட்டு, கடற்கரையில், பிகினி உடையில் படு கவர்ச்சியாக முட்டிப் போட்டு யோகா செய்யும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, வைரலாக்கி இருந்தார் இந்த சி.ஐ.டி நடிகை. யோகா செய்வதற்கென்று தனி நாள் எல்லாம் தேவை இல்லை. தன்னை பொறுத்தவரையில் எல்லா நாளும் சர்வதேச யோகா தினம் எனவும் அதற்கு கேப்ஷன் கொடுத்திருந்தார்.

  வில்லாக வளைந்து

  வில்லாக வளைந்து

  ஆரஞ்சு நிற மோனோகினி அணிந்து, கடலுக்கு அருகே, வில்லாக வளைந்து இவர் செய்த யோகா போஸ், பார்ப்பவர்களை வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு வியப்பை அளிக்கிறது. உங்க உடம்பு நீங்க சொல்ற மாதிரியெல்லாம் கேக்குது, சூப்பர் பிளெக்ஸிபள் என அவரது ஃபாலோயர்கள் கமெண்ட் செக்‌ஷனில் வர்ணித்து தள்ளி உள்ளனர்.

  தலை கீழாக

  தலை கீழாக

  லாக்டவுன் காலங்களில் ஞாயிற்றுக் கிழமையும் ஏதோ புதன் கிழமை போலவும் மற்ற வேலை நாட்களை போலவும் தெரிகிறது என பதிவிட்ட, அவர் கடற்கரையில் தலைகீழாக நிற்கும் யோகாவை செய்து அசத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு யோகா கலையை பயிற்று வித்து வருகிறார்.

  சின்ன கேப் கிடைச்சா போதும்

  சின்ன கேப் கிடைச்சா போதும்

  யோகா செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்ட நடிகை கவிதா கெளசிக், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்ன கேப் கிடைச்சாலும், அது எந்த இடமாக இருந்தாலும், தனது யோகாவை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பயிர்களை காவல் காக்க போடப்பட்டிருந்த செட் ஒன்றின் மேல் ஏறி, இவர் செய்யும் யோகாவை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்து போயுள்ளனர். அந்த சன் செட் ஷாட் வேறலெவல்.

  வீட்டை அழகாக மாற்றுங்கள்

  வீட்டை அழகாக மாற்றுங்கள்

  இந்த லாக்டவுனில் வேலை இல்லாமல் சும்மா வீட்டிலேயே இருப்பது ரொம்ப போர் அடிக்குதுன்னு, வீணாக பொழுதை கழிக்காமல், வீட்டு வேலைகளை செய்வது, வீட்டை எப்படி சிம்பிளாக அழகுப் படுத்துவது போன்ற கலைகளை கற்றுக் கொண்டு, நேரத்தை அதில் செலவழித்து பாருங்கள், போரும் அடிக்காது, உங்கள் வீடும் அழகாக மாறும் என அடுக்கி வைத்த வீட்டில் யோகாவில் வித்தை செய்த படியே போஸும் கொடுத்து, டிப்ஸும் கொடுத்துள்ளார்.

  ஒரு கால் எங்கே

  ஒரு கால் எங்கே

  பிரபல டிவி நடிகை கவிதா கெளசிக்கின் ஒரு கால் எங்கே காணாமல் போனது என இந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கேள்விகளை எழுப்பும் அளவுக்கு தனது ஒரு காலை, மற்றொரு காலில் மடக்கி, கொக்குப் போல ஒற்றைக் காலில், கைகளை மேலே விரித்துப் பறக்கும் படி இவர் செய்யும் ஆசனம் எல்லாம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

  ஒற்றைக் காலில்

  ஒற்றைக் காலில்

  இப்படி ஒரு ஆசனத்தை எல்லாம் நாம் கனவில் கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிரட்சி அளிக்கும் விதமாக, ஒற்றைக் காலை மட்டும் தரையில் பேலன்ஸ் செய்து, ஒட்டுமொத்த உடலையும் மேலே தூக்கி, தரையில் அமர்ந்திருப்பதை போலவே, அமர்ந்து இவர் செய்துள்ள இந்த ஆசனத்தை பார்த்தாலே யோகாவில் இவர் எவ்வளவு பெரிய மாஸ்டர் என்பது புரிந்து விடும்.

  ஒரு காலை கைக்குள் மாட்டி

  ஒரு காலை கைக்குள் மாட்டி

  பலவிதமான கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து வரும் நடிகை கவிதா கெளசிக், தற்போது, இரு கால்களையும் அந்தரத்தில் நீட்டியபடி, கைகளை மட்டுமே ஊன்றி அதிலும், ஒரு காலை கைக்குள் கஷ்டப்பட்டு மாட்டி, செம டஃப் ஆன யோகாவை செய்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா போட்டோ, ஒட்டுமொத்த யோகா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் 'அட' போட வைத்து வருகிறது.

  English summary
  Popular Tv actress and Bollywood actress Kavita Kaushik bends her body for different yoga poses. Her mindblowing asana postures definitely a watchable and practicable one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X