சூனியம் வைத்து அவரை கொன்றுவிட்டார்கள்.. ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தோழி பகீர் குற்றச்சாட்டு!

மும்பை: மாந்திரீகத்தின் மூலம்தான் சுஷாந்தை கொன்று விட்டார்கள் என சுஷாந்தின் தோழியும் பிரபல டிவி நடிகையுமான கிரிசன் பரேட்டோ பகிர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரவது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுஷாந்த் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

ரூ. 15 கோடி

ரூ. 15 கோடி

கடந்த வாரம் சுஷாந்தின் தந்தை, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது போலீஸில் புகார் அளித்தார். சுஷாந்த் கணக்கில் இருந்து ரியா சக்ரபர்த்தியின் கணக்கிற்கு 15 கோடி ரூபாய் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ரியாவுக்கு தொடர்பு

ரியாவுக்கு தொடர்பு

மேலும் சுஷாந்துக்கு எந்த மன அழுத்தமும் இல்லை, ரியா சக்ரபர்த்திதான் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஏற்பாடு செய்த மன நல மருத்துவர்கள்தான் சுஷாந்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். சுஷாந்தின் மரணத்திற்கும் ரியா சக்ரபர்த்திக்கும் சம்பந்தம் உள்ளது என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

மரணத்திற்கு நீதி

மரணத்திற்கு நீதி

மேலும் தங்களிடம் கூட பேச விடாமல் சுஷாந்த்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ரியா சக்ரபர்த்தின் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ரியா சக்ரபர்த்தி மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர்.

மாந்த்ரீகம் வைத்து கொலை?

மாந்த்ரீகம் வைத்து கொலை?

சுஷாந்த் மரணம் கொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். அதேநேரத்தில் சுஷாந்த் சிங் மாந்த்ரீகத்தின் மூலம் கொலை செய்யப்பட்டார் என்றும் தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் சூனியம் வைத்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என டிவி நடிகையும் சுஷாந்தின் தோழியுமான கிரிசன் பரேட்டோ தெரிவித்துள்ளார்.

நடிகை குற்றச்சாட்டு

நடிகை குற்றச்சாட்டு

வைரல் பயானி என்பவர் ரியா சக்ரபர்த்தி ஷேர் செய்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனை பார்த்த நடிகை கிரிசன், "அவர் இந்த பெண்ணுடன் டேட்டிங் செய்யத் தொடங்கிய பிறகு சுஷாந்த் அவருடைய நண்பர்களான நம்மில் எவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை!! அவரது போன் நம்பர்கள் மாற்றப்பட்டன, அதை நாம் அனைவரும் அறிவோம்!

உண்மை வெளிவரும்

உண்மை வெளிவரும்

அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களால் முடியவில்லை! அவரது தந்தையும் அவரை தனது குடும்பத்தினருடன் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்! ரியா சக்ரபர்த்தி.. ஆம் உண்மை வெளிவரும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்! என பதிவிட்டுள்ளார்.

கொல்ல முயற்சி

கொல்ல முயற்சி

மற்றொரு பதிவில் அந்த நபர்கள் எனக்கு ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்களோ அல்லது சூனியம் செய்கிறார்களோ நான் அதை இங்கே வெளியிடுகிறேன்! நான் ஒருபோதும் என்னை கொல்ல மாட்டேன்! எப்போதும்! இது எனது அதிகாரப்பூர்வ அறிக்கை சுஷாந்தை அவர்கள் எப்படிக் கொன்றார்ளோ அதேபோல் என்னையும் கொல்ல முயற்சிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

கைது செய்ய வேண்டும்

கைது செய்ய வேண்டும்

அவரது இந்த பதிவு சுஷாந்த் கொலை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சுஷாந்த் கொலை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது காதலியான ரியா சக்ரபர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றும் ஒரு பக்கம் கோரிக்கை எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X