இளம் பெண் தற்கொலை வழக்கு.. தலைமறைவான சீரியல் நடிகை கைதாகிறார்.. ஆதாரங்கள் சிக்கின!
கொச்சி: இளம் பெண் தற்கொலை வழக்கில் தலைமறைவான சின்னத்திரை நடிகை கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் கொல்லம் அருகிலுள்ள கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. வயது 24.
இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர். இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, திருமணத்துக்கு சம்மதித்தனர்.

காதலை முறித்தார்
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்நிலையில், ஹாரிஸுக்கு வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளனர். சொத்து மற்றும் பண ஆசையில் மயங்கிய ஹாரிஸ், ராம்ஸியுடனான காதல் உறவை முறித்தார்.

ராஸ்மியின் காதலர்
பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த ராம்ஸி, கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், ராம்ஸியின் காதலர் ஹாரிஸை, தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சுமி பிரமோத்
இந்த வழக்கில் போலீசார் மேலும் விசாரணையை தொடங்கினர். ஹாரிஸின் சகோதரர் மனைவி, லட்சுமி பிரமோத். இவர் பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை. ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவரும் தற்கொலை செய்துகொண்ட ராம்ஸியும் நெருங்கிய தோழிகள். இருவரும் இணைந்து டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

கருக்கலைப்பு
இந்நிலையில், நடிகை லட்சுமி பிரமோத்திடமும் அவர் குடும்பத்தினரிடமும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்த மறுநாளில் இருந்தே நடிகையும் அவர் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். ஹாரிஸூடன் நெருக்கமாக இருந்த ராம்ஸி, கர்ப்பமாகி உள்ளார். அவரைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் லட்சுமி பிரமோத்.

தமிழக மருத்துவமனை
இதற்காக, தமிழகத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் போலியான திருமண சான்றிதழை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் லட்சுமி பிரமோத். இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புக்கு ராம்ஸியை அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார், லட்சுமி பிரமோத். அப்போது ஹாரிஸ், அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தாராம்.
Recommended Video

கைது செய்யப்படலாம்
இதற்கிடையே ராம்ஸிக்கும் நடிகைக்கும் இடையிலான வாட்ஸப் மெசேஜ்களை போலீசார் மீட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த வழக்கில் சின்னத்திரை நடிகை லட்சுமி புரமோத் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











