சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: பிரபல டிவி நடிகை சிறுநீரகப் பிரச்னை காரணமாக திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு சினிமா மற்றும் சின்னத்திரைக்கு கருப்பு வருடமாக அமைந்திருக்கிறது.

இந்த வருடத்தில் பல முக்கியமான சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

கிளாஸ் ஆஃப் 2020

கிளாஸ் ஆஃப் 2020

இந்நிலையில் டிவி நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது, இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்பட சில டிவி தொடர்களில் நடித்திருக்கிறார்.

திடீரென உயிரிழப்பு

திடீரென உயிரிழப்பு

இவருக்கு கடந்த ஒரு வருடமாக சிறுநீரகப் பிரச்னை இருந்தது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், இதுபற்றி நெருங்கிய நண்பர்களுக்கு கூட அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சனிக்கிழமை திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு வயது 30.

இழந்து விட்டோம்

இழந்து விட்டோம்

இதை அவருடன், கிளாஸ் ஆஃப் 2020 என்ற தொடரில் நடித்த நடிகர் ரோகம் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் சோசியல் மீடியாவில் லீனாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் இதே நாளில் கிளாஸ் ஆப் 2020 ஷூட்டிங்கில் இருந்தோம். இப்போது உங்களை இழந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

பெர்பக்ட் பதி

பெர்பக்ட் பதி

லீனாவுடன், பெர்பக்ட் பதி என்ற தொடரில் நடித்த நடிகர் ஆயுஷ் ஆனந்த் கூறும்போது, 'அவர் சகோதரருடன் நேற்று பேசினேன். அவருக்கு சில வருடங்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்துள்ளது. இப்படியொரு பிரச்னை இருப்பதே சில நாட்களுக்கு முன் தான் எனக்கு தெரியும். அவர் ஒரு கிட்னியுடன் தான் வசித்து வந்தார்.

அம்மா தானம்

அம்மா தானம்

அதுவும் அவர் அம்மா தானமாகக் கொடுத்தது. சிகிச்சை பலனிறி அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். அவர் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகை ஒருவர் சிறுநீரகப் பிரச்னையால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X