22 வயதே ஆன பிரபல டிவி நடிகை சாலை விபத்தில் அகால மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

சென்னை: 22 வயதே ஆன பிரபல டிவி நடிகை விபத்தில் மரணமடைந்த செய்தி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கூர்க் அருகே உள்ள மடிகேரி பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கேல். இவர் அம்மாநில தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானவர்.

22 வயதே ஆன மெபினா, அம்மாநிலத்தின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான பியாத்தே ஹுடுகீர் ஹல்லி லைஃப் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

கார் விபத்து

கார் விபத்து

இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 இல் டைட்டில் வின்னரானார் மெபினா. இந்நிலையில் நேற்று மாலை காரில் தோழிகளுடன் தனது சொந்த ஊரான மடிகேரிக்கு சென்றார். தேவிஹள்ளி என்ற இடத்தில் சென்ற போது மெபினாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது.

சம்பவ இடத்திலேயே பலி

சம்பவ இடத்திலேயே பலி

இதில் பலத்த காயமடைந்த மெபினா சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த அவரது தோழிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பெல்லூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை அதிர்ச்சி

சின்னத்திரை அதிர்ச்சி

மெபினாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தார் மட்டுமின்றி ஒட்டு மொத்த சின்னத்திரைக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அவர் பங்கேற்ற பியாத்தே ஹுடுகீர் ஹல்லி லைஃப் ரியாலிட்டி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அகுல் பாலாஜி தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி டிவிட்டியுள்ளார்.

ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

அதில் எனக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவரான phhl 4 வெற்றியாளரின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. மெபினா, வாழ வேண்டி இளம் வயது.. அவர் இறந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.. அவரது குடும்பத்தினர் சோகத்தை கடந்து வர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஆடம்பர வாழ்க்கையை விட்டு

ஆடம்பர வாழ்க்கையை விட்டு

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இளம் நடிகை, பியாத்தே ஹுடுகீர் ஹல்லி லைஃப் சீசன் 4ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டு புகழ் பெற்றார். இந்த நிகழ்ச்சி நகரத்தை சேர்ந்த இளம் பெண்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுத்து கிராம வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற வேண்டும்.

பனவாசி கிராமம்

பனவாசி கிராமம்

இந்த நிகழ்ச்சி கர்நாடகாவின் ஹாசனுக்கு அருகிலுள்ள பனவாசி கிராமத்தில் நடைபெற்றது இதில் போட்டியாளர்களுக்கு பிஸிக்கல் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்திலும் வெற்றி பெற்ற டைட்டில் வின்னரான மெபினா திடீரென அகால மரணமடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X