மருத்துவமனையில் இருந்து.. கொரோனா குணமாகாமலேயே வீட்டுக்குத் திரும்பிய டிவி நடிகை.. மீண்டும் கவலை!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிவி நடிகை, குணமாகாமலேயே வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை மோகனா குமாரி சிங். பியார் துனே க்யா கியா, யே ரிஷ்டா க்யா கெஹ்லாதா ஹே, ட்விஸ்ட்வாலா லவ், சில்சிலா பியார் கா, ஃபியர் ஃபைல்ஸ், உட்பட பல இந்தி சிரியல்களில் நடித்துள்ளார்.
ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

லாக்டவுன்
கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லாததால், நடிகை மோகனா குமாரி சிங் தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை
இதுபற்றி அவர் கூறும்போது, எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. கொரோனா பரிசோதனை செய்தோம். ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், காய்ச்சல் குறையவில்லை. இதனால் குடும்பத்தோடு சோதனை செய்தோம். எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கொரோனா அறிகுறி
இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தோடு அனுமதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு எந்த கொரோனா அறிகுறியும் முதலில் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியிருந்தார். டிவி நடிகை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இந்தி சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா நெகட்டிவ்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இவர்கள், குணமாகாமலேயே திடீரென வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். அடுத்த டெஸ்ட்டில் கொரோனா நெகட்டிவ் வந்தால்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் அதற்கு முன்பே வீட்டுக்குத் திரும்பி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரும்பி விட்டேன்
இதுபற்றி, நடிகை மோகனா குமாரி சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் வீட்டுக்கு திரும்பிவிட்டேன். இன்னும் எங்களுக்கு கொரோனா இருக்கிறது. தனிமைப்படுத்தப் பட்டுள்ளோம். குணமாக, எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். ஐந்து நாட்கள் முன்புவரை என் உடலில் கொரோனா வைரஸ் இருந்திருக்கலாம்.

பின்பற்ற வேண்டும்
இன்னும் சில நாட்களில் நாம் இதை வெல்வோம் என நினைக்கிறேன். அதுவரை அதற்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவேண்டும். நாங்கள் சிறப்பான சுவாசம் மற்றும் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகவே உணர்கிறோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











