இரண்டாவது திருமணம் செய்த 'நம்மவீட்டுப் பிள்ளை' நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், சீரியல் என பிஸியாக இருந்துவரும் மைனா நந்தினி படங்களிலும் நடித்து வருகிறார்.

நம்ம வீட்டுப்பிள்ளை

நம்ம வீட்டுப்பிள்ளை

ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நந்தினி. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும், யோகிபாபுவின் நடிப்பில் வெளியான தர்மபிரபு படத்திலும் நடித்திருந்தார்.

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

ஏற்கனவே ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் நந்தினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினியின் கணவர் கார்த்திகேயன் லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்த சம்பவம் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மைனா நந்தினி, சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

மைனா கர்ப்பம்

மைனா கர்ப்பம்

இருவரும் அவ்வப்போது டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மைனா நந்தினி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மைனா நந்தினி தான் அளித்த பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X