பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: காதல் காரணமா?

By Siva

ஹைதராபாத்: தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நாக ஜான்சி(21). பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பவித்ர பந்தன் சீரியல் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.

ஜான்சி ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்கொலை

தற்கொலை

ஜான்சியின் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் கதவை பல முறை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு கதவை உடைத்துப் பார்த்தபோது ஜான்சி மின்விசிறியில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணை

விசாரணை

தகவல் அறிந்த போலீசார் ஜான்சியின் வீட்டிற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான்சியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல்

காதல்

ஜான்சி தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு ஆணிடம் சாட்டிங் செய்துள்ளார். கடந்த 6 மாதங்களாக அவர் அந்த நபருடன் நெருக்கமாக பழியுள்ளாார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஜான்சி தூரத்து உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த காதலுக்கு ஜான்சியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X