'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகைக்கு கல்யாணமாயிடுச்சு... நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்!
சென்னை: பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா தனது காதலரை திருமணம் செய்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகையான நக்ஷத்ரா பல்வேறு தொலைக் காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார் நக்ஷத்ரா. சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், ரோஜா, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம்
தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை நக்ஷத்ரா. இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது.

அவுட்டிங் போட்டோஸ்
நிச்சயதார்த்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் அவுட்டிங் செல்லும் போட்டோக்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

மெரூன் நிற பட்டுப்புடவையில்
இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா தனது காதலரை இன்று திருமணம் செய்துள்ளார். சங்கீத், மெஹந்தி விழா என மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. நடிகை நக்ஷத்ரா மெரூன் நிற பட்டுப்புடவையில் படு கலக்கலாக இருந்தார்.

திருமண வாழ்த்து
நக்ஷத்ரா ராகவ் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். தனது திருமண போட்டோக்களை நடிகை நக்ஷத்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நக்ஷத்ராவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











