படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல 'வாணி ராணி' நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. கண்ணீர் விட்டு கதறல்!
சென்னை: பிரபல டிவி நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.
இதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

சின்னத்திரை தொடர்கள்
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தமிழகத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட, சின்னத்திரை படப்பிடிப்பும் சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அம்மாநில அரசு இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதி அளித்ததை அடுத்து, சில சின்னத்திரை தொடர்களின் ஷூட்டிங் தொடங்கியது.

நடிகை நவ்யா சாமி
ஒரு டிவி சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அதில் நடித்த போட்டு பிரபாகர் என்ற நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்தப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 'நா பேரு மீனாட்சி' என்ற சீரியலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகை நவ்யா சுவாமியும் கலந்துகொண்டார். நடிகை நவ்யா சாமி, தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி தொடர்களிலும் நடித்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறி
இந்நிலையில், இவருக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனை முடிவில் நடிகை நவ்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கதறி அழுதேன்
இதுபற்றி நவ்யா சுவாமி கூறும்போது, 'கடந்த மூன்று நான்கு நாட்களாக உடல் சோர்வு மற்றும் தலைவலி இருந்தது. மருத்துவர் கூறிய அறிவுரையின் அடிப்படையில் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை. இரவில், நான் கதறி அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. சக நடிகர்களையும் பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன்.

போட்டி அதிகம்
படப்பிடிப்பு நடத்த இது பாதுகாப்பானச் சூழல் இல்லை. டிவி துறையில் போட்டி அதிகம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சீரியலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் படப்பிடிப்பு நடந்தது. நான் இந்தத் துறையில்தான் இருக்கிறேன். அதனால் வர முடியாது என கூறவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் வைரஸ் பாதித்துவிட்டது' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications