நம்ப முடியாத லுக்.. எக்கச்சக்க கிளாமரில் பிரபல சீரியல் நடிகை.. எக்குத்தப்பாக வைரலாகும் போட்டோஸ்!
மும்பை: பிரபல டிவி நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
பிரபல டிவி சிரீயல் நடிகை நியா சர்மா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பான தெய்வம் தந்த என் தங்கை தொடரில் நாயகியாக நடித்துள்ளார்.
இது இந்தியில், ஏக் ஹஸாரோன் மேய்ன் மேரி பெஹ்னா ஹை என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இதன் தமிழ் மொழி மாற்றம்தான் அந்த தொடர்.

ஜமாய் ராஜா
அடுத்து, ஜீடிவியில் ஒளிபரப்பான ஜமாய் ராஜா என்ற தொடரிலும் நாயகியாக நடித்திருந்தார். அடுத்து 'நாகினி' தொடரிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இவர். நாகினி 5 வது சீசனிலும் நடித்து வருகிறார். பிரீட்டீஷை சேர்ந்த நாளிதழ் ஒன்று வரிசைப்படுத்திய ஆசியாவின் கவர்ச்சிகரமான சிறந்த 50 பெண்கள் பட்டியலில் கடந்த 2016 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும் 2017 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தவர் நியா.

வெப் சீரிஸ்களில்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துள்ள நியா சர்மா, வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம ஹாட்டாக இருக்கிறது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் மர்மமானது
கருப்பு நிற உடையில், கிளாமராக அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களுக்கு சக நடிகைகள் உள்பட ஏராளமான நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். வழக்கமாக போட்டோக்களுக்கு அழகான கேப்ஷன் கொடுக்கும் நியா, இந்த போட்டோக்களுக்கும் அப்படியே கொடுத்திருக்கிறார். கருப்பு என்பது சாதாரணமானது ஆனால், திமிர்பிடித்தது, சோம்பேறியானது, எளிதானது, ஆனால் மர்மமானது என்று கூறியிருக்கிறார்.

நீங்களும் இருக்கீங்களாமே
பல நெட்டிசன்கள் இதற்கு கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஒருவர், கருப்பு மர்மத்துக்குள் மர்மமானது என்று கூறியுள்ளார். இன்னொருவர், இந்தி பிக்பாஸ் அடுத்த சீசன்ல நீங்களும் இருக்கீங்களாமே, ஏதாவது தகவல் உண்டா? என்று கேட்டுள்ளார். ஒரு ரசிகை, என்ன நியா, நானும் கமென்ட் போட்டுட்டே இருக்கேன், ரிப்ளையே பண்ண மாட்டேங்கிறீங்களே ஏன்? என்று பாசமாகக் கேட்டிருக்கிறார்.

டிரென்டியான டிரெஸ்
மும்பை லோக்கல் டிரைன்ல நிற்கிற மாதிரியே போஸ் கொடுத்திருக்கீங்க என்று ஒரு நெட்டிசன் சொல்ல, இன்னொருவர், இது சாதாரணமாகத்தான் இருக்கு.. ஏன் டிரென்டியாவே டிரெஸ் போடறதில்லை? என்று கேட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டா அழகா இருப்பீங்க என்று அட்வைஸ் செய்திருக்கிறார் ஒருவர். சிலர் வழக்கம் போல அவர் அழகை அப்படி இப்படி புகழ்ந்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











