திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்: ஆண் நண்பர் மீது நடிகை நிலானி போலீசில் புகார்
சென்னை: டிவி நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிலானி. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்டவர்.

போலீஸ் உடையில் போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட நிலானி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விளம்பரத்திற்காக அப்படி செய்ததாக நிலானி தெரிவித்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார்(33) மீது புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
லலித் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். படப்பிடிப்பு தளத்திற்கே வந்து தொல்லை கொடுக்கிறார். எனக்கு தொல்லை கொடுக்கும் லலித் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











