போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் பிரபல சீரியல் நடிகை.. சிரஞ்சீவியே சிபாரிசு செய்தாராம்!
சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட பிரபல சீரியல் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன், அஷ்வின் ககுமன்னு, சூரி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்நிலையில் இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகரான சிரஞ்சீவி நடிக்கிறார்.

ஐட்டம் பாடலுக்கு...
ஸ்ருதி ஹாசன் கதாப்பாத்திரத்தில் தமன்னாவும், லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலா ஷங்கர் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு, பிரபல டிவி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சிரஞ்சீவி சிபாரிசு
ராஷ்மி கவுதம் என்ற அந்த சீரியல் நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு நடிகர் சிரஞ்சீவியே படக்குழுவுக்கு சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியே தன்னை சிபாரிசு செய்துள்ளார் என்பதால் நடிகை செம ஹேப்பியாகியுள்ளாராம்.

அதிகாரப்பூர்வ தகவல்
சின்னத்திரை நடிகையான ராஷ்மி கவுதம் டான்ஸர் ஆவார். அடிக்கடி டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ராஷ்மி கவுதம் போலா ஷங்கர் படத்தில் ஒப்பந்தமானது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

கடைசியாக ஷாடோ
ராஷ்மி கவுதம் பட்ஜெட்டுக்குள் அடங்குவார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலா ஷங்கர் படத்தை மேஹர் ரமேஷ், இயக்கி வருகிறார். இவர் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு வெங்கடேஷை வைத்து ஷாடோ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு தற்போது மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார்.

ஆச்சார்யா மற்றும் காட்ஃபாதர்
நடிகர் சிரஞ்சீவி சை ரா நரசிம்ஹா ரெட்டி படத்தில் கடைசியாக நடித்தார். பெரிய பட்ஜெட் செலவில் உருவான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது ஆச்சார்யா மற்றும் காட்ஃபாதர் ஆகிய படங்களில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











