அவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோள் மேல ராஜா சின்ன ரோஜா படத்தில் ஏறி நின்ன நடிகை ராகவி சசிகுமாரின் கண்ணீர் கதை பலரையும் உருக்கி வருகிறது.
சில படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை நடிகையாக நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு நடிகை ராகவியின் கணவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ராஜா சின்ன ரோஜா படத்தில்
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் வளர்ந்த குழந்தை நட்சத்திரமாக நடிகை ராகவி சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் தோள் மீது ஏறி நிற்க வேண்டிய காட்சியில் நடிக்க மிகவும் பயந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

கணவர் தற்கொலை
8 ஆண்டுகள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த ராகவி சசிகுமார் திருமணம் 13 ஆண்டுகள் சந்தோஷமாக கடந்த நிலையில், திடீரென அவரது கணவர் கடந்த 2019ம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திருட்டு பட்டம்
வேலை இடத்தில் கேமிராவை திருடிவிட்டார் என திருட்டு பட்டம் கட்டி என் கணவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்தே கொன்று விட்டனர். ஆனால், அதுகுறித்து என்னிடம் அவர் மனம் விட்டு பேசியிருந்தாலே அந்த பிரச்சனையில் இருந்து அவரை எப்படியாவது மீட்டிருப்பேன். ஆனால், என்னிடம் எதுவுமே சொல்லாமல் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.

கடவுள் சும்மா விடமாட்டார்
திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற செய்தி வந்ததும் நான் இடிந்தே போய்விட்டேன். என் குழந்தைக்காக என்னை என் அம்மா எவ்வளவோ போராடி தேற்றினார். நிச்சயம் என் கணவர் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார்.

வீடுமுழுக்க போட்டோ
கணவர் நினைவில் இருந்து நான் மீள வேண்டும் என்பதற்காக வீடு முழுக்க அவருடன் இருக்கும் போட்டோக்களை சொந்தக்காரர்கள் அகற்ற சொன்னார்கள். ஆனால், அவர் நினைவு எப்போதுமே என் நெஞ்சில் நிறைந்து இருப்பதால் ஒரு புகைப்படத்தை கூட அகற்ற மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டேன். அவர் எப்போதுமே என் கூட இருப்பார் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ராகவி.


Click it and Unblock the Notifications











