போலி இன்ஸ்டா கணக்கில் சரமாரி அவதூறு.. பிரபல சின்னத்திரை நடிகை சைபர் கிரைமில் புகார்!

By

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை, தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை ஷாமிலி. இவர் ரோஜா, தென்றல், சரவணன் மீனாட்சி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் சில திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

போலி கணக்கு

போலி கணக்கு

இவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். தவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்; அதில், லைப் ஸ்டைல் தொடர்பான தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

போலி கணக்கு

போலி கணக்கு

இதனால் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களையும் கமென்ட்களையும் குவிப்பார்கள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகை ஷாமிலி சுகுமார் பெயரில், போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதைப் பார்த்தார்.

அவதூறு கருத்துகள்

அவதூறு கருத்துகள்

இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்தக் கணக்கில் ஷாமிலி பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஷாமிலி, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சைபர்கிரைமில் புகார்

சைபர்கிரைமில் புகார்

இதைக் கண்டு ஷாக் ஆன, ஷாமிலி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஷாமிலியின் புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள்

மர்ம நபர்கள்

கடந்த சில வருடங்களாக சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கி வருவதை சில மர்மநபர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், போலி கணக்கு தொடங்கி, நடிகையை பற்றி அவதூறாகக் கருத்துக் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X