பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை!

By

ஐதராபாத்: பிரபல டிவி நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல டி.வி.சீரியல் நடிகை சாந்தி என்ற விஸ்வசாந்தி. ஏராளமான தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளார்.

கூடவே டி.வி.யில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கு மக்களிடம் பிரபலமான முகமாக இருந்தார்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

இவர், ஐதாராபாத்தில் யெல்லாரெட்டிகுடா பகுதியில் உள்ள என்ஜினீயர்ஸ் காலனியில், ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில நாடகளாக இவர் வீடு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இன்று காலை எஸ்.ஆர்.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

செல்போன் கிடைத்தது

செல்போன் கிடைத்தது

அவர் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடி பார்த்தனர். அப்போது நடிகை சாந்தியின் செல்போன் கிடைத்தது. அதைக் கைப்பற்றிய போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மேலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏதும் ஆதாரங்கள் கிடைக்கிறதா என்றும் போலீசார் தேடினர்.

எப்படி இறந்தார்?

எப்படி இறந்தார்?

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். அருகில் இருந்த சிசிடிவியில் இருந்த காட்சிகளையும் சோதனை செய்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

மர்மமான முறையில் இறந்துள்ள நடிகை சாந்தி என்ற விஸ்வசாந்தி, விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். நடிப்பதற்காக ஐதராபாத் வந்த அவர், அங்கு தங்கியிருந்து தொடர்களில் நடித்து வந்தார். பல சீரியல்களில் நடித்துள்ள இவர், பல நிகழ்ச்சிகளையும் டிவிகளில் வழங்கியுள்ளார். சாந்தியின் மர்ம மரணத்தை அடுத்து தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஶ்ரீலட்சுமி

நடிகை ஶ்ரீலட்சுமி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தெலுங்கு சீரியல் நடிகை ஶ்ரீலட்சுமி நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். தெலுங்கு சினிமா இயக்குனர் தேவதாஸின் மகளான இவர், புற்றுநோய்கு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஊரடங்கு காரணமாக அவரது இறுதி நிகழ்ச்சியில் அதிகமானவர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சாந்தி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: tv actress சாந்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X