பெட்ரூமில் சரக்கு பாட்டில்.. சின்னத்திரை நடிகை மரணமடைந்தது எப்படி? மர்மச்சாவில் அதிரடி திருப்பம்!

By

ஐதராபாத்: பிரபல டிவி நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்தில் போலீசார் அவர் பெட்ரூமில் இருந்து மதுபாட்டில்களை கைப்பற்றியுள்ளனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி என்ற விஸ்வசாந்தி. ஏராளமான தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளார்.

கூடவே டி.வி.யில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கில் பிரபலமான முகமாக இருந்தார்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

இவர், ஐதாராபாத்தில் யெல்லாரெட்டிகுடா பகுதியில் உள்ள என்ஜினீயர்ஸ் காலனியில், ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவருக்கு அவரது பெற்றோர் போன் செய்தனர். அவர் எடுக்கவில்லை. இரண்டு நாட்களாக போனை எடுக்காததால், அபார்ட்மென்ட் செக்யூரிட்டிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வந்து வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.

கதவை உடைத்தனர்

கதவை உடைத்தனர்

பதில் இல்லை. இதையடுத்து அபார்ட்மென்ட் செகரட்டரியிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் எஸ்.ஆர்.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, விஸ்வசாந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கால்கள் பெட்டில் கிடக்க, உடல் தரையில் கிடந்தது.

செல்போன்

செல்போன்

பெட்ரூமில் மதுபாட்டில்களும் சைட் டிஷும் இருந்தன. பிறகு, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகை சாந்தியின் செல்போன் வீட்டில் கிடைத்தது. அதைக் கைப்பற்றிய போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

போதையில் விழுந்தாரா?

போதையில் விழுந்தாரா?

அவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக, பணப்பிரச்னை காரணமாக சாந்தி மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவித்தனர். இதனால் அவர் அதிகமாக மது அருந்தி இருக்கலாம் என்றும் அதனால் போதையில் கீழே விழுந்ததில் மண்டையில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

இருந்தும் அவர் வீட்டுக்கு யாரும் வந்து சென்றார்களா? என்பது குறித்து அறிய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சோதனை செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சாந்தியின் உறவினர்கள் உடலை பெறுவதற்காக ஐதராபாத் வந்துள்ளனர். மர்மமான முறையில் இறந்துள்ள நடிகை சாந்தி என்ற விஸ்வசாந்தி, விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்.

More from Filmibeat

Read more about: tv actress சாந்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X