ஹோலி கொண்டாட்டத்தில் டிவி நடிகைக்கு லிப் லாக் அடித்த காதலர்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
மும்பை: வட மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டம் மார்ச் 7ம் தேதி வேறலெவலில் கொண்டாடப்பட்டன. ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடனும் குடும்பத்தினருடனும் ஹோலி பண்டிகையை வண்ணங்களை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே தனது புதிய காதலரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு அவர் நடத்திய பிரம்மாண்ட ஹோலி பண்டிகையில் கலந்து கொண்ட டிவி நடிகர்கள் முத்த மழை பொழிந்தது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ஹோலி கொண்டாடிய புது ஜோடி
பாலிவுட்டின் புதிய ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் கலர் பூசிக் கொண்டு ஹோலி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை கரீனா கபூரும் தனது கணவரும் நடிகருமான விக்கி கவுஷல் உடன் ஹோலி கொண்டாடினார். நடிகை தமன்னா, நியா ஷர்மா என ஏகப்பட்ட பிரபலங்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சுஷாந்தின் முன்னாள் காதலி
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி அங்கிதா லோகாண்டே கடந்த 2021ம் ஆண்டு விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அங்கிதா லோகாண்டே மற்றும் விக்கி ஜெயின் தம்பதியினர் மிகப்பெரிய அளவில் டிவி நடிகர்கள் பங்கேற்கும் விதமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில், இந்த ஆண்டும் அதே போல ஒரு ஹோலி பண்டிகையை கொண்டாடி அசத்தி உள்ளனர்.

காதலருடன் டிவி நடிகை
டிவி நடிகர்களான ஷெஃபாலி ஜரிவாலா மற்றும் பரக் தியாகி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், அங்கிதா லோகாண்டே ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட லிப் லாக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

லிப் லாக்
ஹோலி கொண்டாட்டமே இளைஞர்களுக்கான கொண்டாட்டமாக மாறி உள்ள நிலையில், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து தனது காதலிக்கு டிவி நடிகர் பரக் தியாகி நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











