"அழகு" ஸ்ருதிராஜூக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : தமிழ் நாடக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகி ஸ்ருதிராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஸ்ருதிராஜ் தமிழ், மலையாளம் , கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். 2009 துவங்கி இவர் முழுவதுமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் சன் தொலைகாட்சியில் நடித்த முதல் நாடகமான தென்றல் நாடகம் பெரிய வெற்றி அடைந்தது. அந்த சமயத்தில் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான தீபக்குடன் அந்த நாடகத்தில் நடித்திருப்பார். அப்போது இவர்களின் ஜோடியை பற்றி புகழாத நாடக பிரியர்களே இருந்திருக்கமாட்டார்கள்.
அப்போதிலிருந்தே நாடக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதிராஜ் தொடர்ந்து நாடகங்களிலே நடித்து வருகிறார். இவர் தெலுங்கிலும் ஒரு நாடகத்தில் ஒரு வருடம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிராஜின் பிறந்தநாளாக இருந்தாலும் இன்று ஊரடங்கு உத்தரவின் மூன்றாவது நாள் என்பதால். அவரின் மிக நெருங்கிய நண்பர்களே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறி வருகின்றனர்.
ஸ்ருதிராஜ் படத்தில் நடித்து அசத்தியதை விட நாடகங்களில் நடித்து பல உச்சங்களை தொட்டு இருக்கிறார். இதுவரை சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைகாட்சி நடத்திய பல நாடக விருது விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை தட்டி சென்றிருக்கிறார்.

சமூக வலைத்தலங்களில் ஸ்ருதிராஜ் ரசிகர்கள் மட்டும் தற்போது ஸ்ருதிராஜிற்கு சில வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளனர் .
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 17 முதல் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் மக்களும் இயல்பான பிறந்தநாள் போன்ற விழாக்களையும் தவிர்த்து வருகின்றனர். இது இந்த நேரத்தில் மிகவும் அவசியம் என்றும் அரசு கூறி வருகிறது.


Click it and Unblock the Notifications











