பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. காதலன் கொடுத்த டார்ச்சரே காரணம்.. குடும்பத்தினர் பகீர்!
ஹைதராபாத்: பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ஒளிபரப்பான மனசு மமதா சீரியலின் மூலம் பெரும் பிரபலமானவர் நடிகை ஸ்ரவாணி.
மவுனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரவாணிக்கு என இல்லத்தரசிகள் உட்பட தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரவாணி ஹைத்ராபாத்தின் மதுரா நகர் பகுதியில் அம்மா அப்பா என குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரவாணி நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது படுக்கையறையில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் நடிகை ஸ்ரவாணி.

பிரேத பரிசோதனை
நேற்று இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்குள் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காதலன்தான் காரணம்
நடிகை ஸ்ரவாணியின் தற்கொலையால் தெலுங்கு சின்னத்திரை வட்டாரமும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகை தற்கொலைக்கு காரணம் டிக்டாக் பிரபலமான தேவராஜ்தான் என நடிகையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டிக்டாக் மூலம் அறிமுகம்
ஸ்ரவாணியின் தற்கொலையை தொடர்ந்து, லோக்கல் போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளனர். ஸ்ரவாணிக்கு, தேவராஜ் டிக்டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அடிக்கடி தனிமையில்
இவர்கள் இணைவரும் இணைந்து பல காதல் வசனங்களுக்கு டிக்டாக் செய்துள்ளனர். மேலும் டூயட் பாடல்களுக்கும் டிக்டாக் செய்திருக்கின்றனர். நாளடைவில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

காதலன் பிளாக்மெயில்
இந்நிலையில் ஸ்ரவாணிக்கும் தேவராஜூக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேவராஜை விட்டு ஸ்ரவாணி விலகியதாக கூறப்படுகிறது. இதனால் தேவராஜ், ஸ்ரவாணியை பிளாக்மெயில் செய்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ரவாணியை துன்புறுத்தியதாகவும் அவரின் குடும்பத்தார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பகிரங்க குற்றச்சாட்டு
தேவராஜ் போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டினார் என்றும் இதனால் தங்களின் மகள் பதற்றத்தில் இருந்ததாகவும் இறுதியாக இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். தங்களின் மகள் சாவுக்கு தேவராஜ்தான் காரணம் என்றும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

8 ஆண்டுகளுக்கும் மேல்..
தேவராஜ் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ஆவார். ஸ்ரவாணி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்து ஸ்ரவாணியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











