ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய 'டிக்டாக்' காதலன்.. டிவி. நடிகை தற்கொலைக்குப் பின் பகீர் தகவல்கள்!

By

ஐதராபாத்: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஐதராபாத் மதுரா நகரில் வசித்து வந்தவர் ஸ்ரவாணி கொண்டபள்ளி . தெலுங்கு, டிவி சீரியல் நடிகை.

மனசு மமதா, மௌனராகம் உள்பட பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

ஜன்னல் வழியாக

ஜன்னல் வழியாக

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, காலையில் ஷூட்டிங் இருப்பதாகக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றார். அவர் அம்மாவும் சகோதரர் சிவாவும், இரவு டிபன் ரெடி செய்துவிட்டு அவர் வருகைக்குக் காத்திருந்தனர். வரவில்லை. சத்தம் கொடுத்தும் பதில் இல்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார் சிவா. அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

கதவை உடைத்து

கதவை உடைத்து

அதிர்ச்சி அடைந்த அவர், கதவை உடைத்து அவரை இறக்கி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஸ்ரவாணியின் சகோதரர் சிவா, எஸ்.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுபற்றி கூறப்படுவதாவது:

டிக்டாக் பழக்கம்

டிக்டாக் பழக்கம்

நடிகை ஸ்ராவணிக்கு, தேவராஜ் ரெட்டி என்ற இளைஞருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்தவர் தேவராஜ். இருவரும் பின்னர் காதலில் விழுந்தனர். வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து மிரட்டல்

தொடர்ந்து மிரட்டல்

இதை ஸ்ரவாணியிடம் காண்பித்து, தேவராஜ் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால், சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரவாணி, பயத்தில் முதலில் ரூ.30 ஆயிரமும் பிறகு ரூ.80 ஆயிரமும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

சிறையில் அடைத்தனர்

சிறையில் அடைத்தனர்

இதையடுத்து அவர் மீது போலீசில் கடந்த ஜூன் மாதம் புகார் கொடுத்ததாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே இப்படி ஒரு முடிவை ஸ்ரவாணி எடுத்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், வேறு ஒரு தகவலும் கூறப்படுகிறது. ஸ்ரவாணி, கடந்த ஜூன் மாதம் எஸ்.ஆர்.நகர் போலீசில், தேவராஜ் மீது புகார் கொடுத்துள்ளார்.

மீண்டும் பழக்கம்

மீண்டும் பழக்கம்

அப்போது போலீசார், தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் தேவராஜ் வெளியே வந்துள்ளார். இப்போது ஸ்ரவாணியும் தேவராஜும் மீண்டும் தங்கள் பழக்கத்தை தொடங்கியதாகவும் இது நடிகையின் வீட்டில் பிரச்னையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவும் இந்தப் பிரச்னை வீட்டில் வாக்குவாதமாக மாறி இருக்கிறது.

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

இதையடுத்தே நடிகை ஸ்ரவாணி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் டிக்டாக் தேவராஜிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் என்பதால் போலீஸ் டீம் அவரைப் பிடிக்க காக்கிநாடா சென்றுள்ளது. அவரை போலீசார் பிடித்துவிட்டதாகவும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X