பில்லி சூனியத்தால் பிரபலமடைய வைப்பதாக மோசடி.. டிவி நடிகை தூக்குப்போட்டு தற்கொலை.. காதலர் கைது!

By

மும்பை: பிரபல டிவி நடிகை தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் | DIRECTOR E V GANESH CHAT | FILMIBEAT TAMIL

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் சேஜல் சர்மா. வயது 25. நடிப்பு ஆசை காரணமாக மும்பை வந்தார்.

சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தானே, மிரா ரோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, நடித்து வந்தார்.

தற்கொலை

தற்கொலை

இவர் நடித்ததில் தோ ஹாப்பி ஹை ஜி என்கிற இந்தி மெகா தொடர் ஹிட் ஆனதால் பிரபலமானவர். சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவர், ஆஸாத் பரிந்தே என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர், கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திடீரென தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது அப்போது பரபரப்பானது.

தொடர்ந்து விசாரணை

தொடர்ந்து விசாரணை

அவர் வீட்டில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. நடிகை சேஜல் சர்மா எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்பட்டு இருந்தது. இது சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிரா ரோடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

செல்போன் மூலம்

செல்போன் மூலம்

தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது அம்மா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடிகை சேஜலின் செல்போன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்ட அன்று, ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் தொடர்ந்து போனில் பேசியுள்ளார். இதனால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

பில்லி சூனியம்

பில்லி சூனியம்

டெல்லியை சேர்ந்த அவர், சேஜல் சர்மாவின் காதலர் என்பது தெரியவந்தது. மாடலாக இருக்கும் ஆதித்யா ஜிம் பயிற்சியாளர். நடிகை சேஜல் சர்மாவுக்கு பிரபலம் ஆகும் ஆசை இருந்துள்ளது. இதை அறிந்த ஆதித்யா, பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலம் அடைந்து விடலாம் என்றும் அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இதையடுத்து சேஜல் சர்மாவிடம் பணமோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவரிடம் சண்டை போட்டிருக்கிறார் சேஜல். அவர் தற்கொலை செய்துகொண்ட அன்று காதலை முறித்துக் கொண்டார்களாம். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் ஆதித்யாவை கைது செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X