101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி அனிஷா.. மோசடி வழக்கில் கைது!

சென்னையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

மோசடி வழக்கில் டிவி சீரியல் நடிகை அனிஷா கைது!!- வீடியோ

சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடித்துவிட்டு கார் ஓட்டுவது, குடிபோதையில் ஆட்டம் போடுவது என டிவி தொகுப்பாளினிகள் சின்னத்திரை நட்சத்திரங்கள் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது.

அண்மையில் பாலியல் வழக்கில் சின்னத்திரை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக காவல்துறையை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டார்.

அனிஷா என்கிற பூர்ணிமா

அனிஷா என்கிற பூர்ணிமா

இந்நிலையில் மோசடி வழக்கில் பிரபல டிவி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப்பட்டுள்ளார். நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்கிற பூர்ணிமா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக உள்ளார்.

101 ஏசிகள்

101 ஏசிகள்

அனிஷாவும் அவரது கணவர் சக்திமுருகனும் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் வைந்திருந்த நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை அவர்கள் மொத்தமாக வாங்கியுள்ளனர்.

பணம் கேட்ட கடைக்காரர்

பணம் கேட்ட கடைக்காரர்

அதற்கான தொகையை செக்காக கொடுத்துள்ளார் அனிஷா. ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், அனிஷா மற்றும் அவரது கணவரிடம் பணம் கேட்டுள்ளார்.

மிரட்டிய அனிஷா கைது

மிரட்டிய அனிஷா கைது

ஆனால் பணம் கொடுக்காமல் நழுவிய அனிஷா உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை அனிஷாவையும் அவரது கணவரின் சகோதரர் ஹரிகுமாரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கணவர் தலைமறைவு

கணவர் தலைமறைவு

அனிஷாவின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ள நிலையில் இவர்கள் நடத்திவந்த ட்ராவல்ஸ் ஏஜென்சியிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அனிஷாவின் கணவர் சக்திமுருகனை போலீசார் தேடிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X